இந்தியாவின் நறுமணப் பொருட்களின் ஏற்றுமதி ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 31 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஏற்றுமதி 3.78 லட்சம் டன்னாகவும் இதன் மதிப்பு ஒரு பில்லியன் டாலருக்கும் மேலாக இருந்தது.
இந்த ஏற்றுமதியில் மிளகாய் மற்றும் சீரகத்தின் பங்கு அதிகம் என்றும், இந்தியாவின் நறுமண பொருட்களுக்கு அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு சந்தையில் நல்ல தேவை இருப்பதாகவும் நறுமண பொருட்கள் வாரிய தலைவர் கே.சி. பாபு தெரிவித்தார்.
கடந்த வருட இதே காலகட்டத்தில் (ஏப்ரல் செப்டம்பர் 2012) நறுமண பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு 747.49 மில்லியன் டாலாராக இருந்தது. மிளகாய் ஏற்றுமதி 6 சதவீகிதமும், சீரக ஏற்றுமதி 93 சதவீதமும் அதிகரித்திருக்கிறது. மேலும், சோம்பு, ஏலக்காய், மஞ்சள் மற்றும் மிளகு ஆகிய நறுமண பொருட்களும் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகித்தன.
கடந்த வருட இதே காலகட்டத்தில் ஏற்றுமதி 3.14 லட்சம் டன்னாக இருந்தது. இப்போது உயர்ந்து 3.78 லட்சம் டன்னாக அதிகரித்திருக்கிறது.
இந்திய நறுமண பொருட்கள் அமெரிக்காவுக்கு அதிமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதை தவிர மலேசியா, யூ.ஏ.இ., சீனா, ஜெர்மனி, சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்றுமதிக்கால நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கை தாண்டி ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது.