மக்களிடையே சேமிக்கும் பழக்கத்தை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக கிசான் விகாஸ் பத்திரத்தை மீண்டும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக நாட்டில் சேமிக்கும் பழக்கம் சரிந்து வருகிறது. மக்களிடையே சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் கிசான் விகாஸ் பத்திரத்தை மீண்டும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மோசடி நிறுவனங்களில் பணத்தை கட்டி மக்கள் ஏமாறுவதை இதன் மூலம் தடுக்க முடியும். அடுத்ததாக மக்களிடையே சேமிக்கும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.