வணிகம்

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கொள்கைகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்: விப்ரோ நிறுவனம் கருத்து

பிடிஐ

அமெரிக்க அதிபர் டோனல்டு ட்ரம்பின் கொள்கைகள் தங்களது வர்த்தகத்துக்கு பெரிய அளவில் மோசமான தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியவை என்று தகவல் தொழில் நுட்ப முன்னணி நிறுவனமான விப்ரோ தெரிவித்துள்ளது.

அமெரிக்கா உட்பட அமெரிக்க நாடுகளிலிருந்துதான் விப்ரோவுக்கு 52% வர்த்தகம் வந்து கொண்டிருக்கிறது. மார்ச் 31-ம் தேதி முடிந்த நிதியாண்டு குறித்த தங்கள் அறிக்கையை அமெரிக்க செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் (SEC) இட சமர்ப்பித்த விப்ரோ, அதில், “தடையற்ற வர்த்தகத்துக்கு ட்ரம்ப் நிர்வாகம் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அமெரிக்காவுக்குள் வரும் பொருட்களுக்கு அதிக அளவில் கட்டணங்களை விதித்துள்ளது அமெரிக்கா

அமெரிக்க சமூக, அரசியல், பொருளாதார நிலைமைகளில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது எங்கள் நிறுவனம் தற்போது வர்த்தகம் செய்து வரும் பகுதிகளில் சட்டங்கள், கொள்கைகள் ஆகியவை அயல்நாட்டு வர்த்தகம், உற்பத்தி, மேம்பாடு, மற்றும் முதலீடு ஆகியவற்றில் மாற்றங்களை ஏற்படுத்துமானால் அது எங்கள் வர்த்தகத்தை கடுமையாகவே பாதிக்கும்” என்று கூறியுள்ளது.

மார்ச் 31, 2017-ல் முடிந்த நிதியாண்டில் விப்ரோ நிறுவனம் ரூ. 55,420.9 கோடி விற்பனை செய்துள்ளது. ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு எச்1பி விசா கட்டுப்பாடுகளை அமல்படுத்தப்பட்டது, இதனால் இந்திய ஐடி நிறுவனங்கள் கடுமையாக பாதிப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்திய ஐடி சந்தையான பெங்களூரு மற்றும் புனேயில் பலர் வேலையை இழக்கும் அபாயம் நேரிட்டுள்ளது.

இந்நிலையில் விசா கட்டுப்பாடுகளையடுத்து ஜூன் மாதத்தில் தங்களது நிறுவனத்தில் பாதிக்கும் மேல் அமெரிக்கர்களை பணியிலமர்த்தும் படலம் பணி அமல்படுத்தப்பட்டிருக்கும் என்று ஏப்ரலில் விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்க பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வரியத்திடம் தாக்கல் செய்த அறிக்கையில் விப்ரோ கூறும்போது, அமெரிக்க நாடுகள் அல்லது ஐரோப்பாவில் பொருளாதாரம் தொடர்ந்து நிச்சயமற்ற நிலைகளில் சென்றாலோ அல்லது உலக நிதிச்சந்தை சரிவடைந்தாலோ தங்கள் சேவைகளுக்கான விலை நிர்ணயம் அவ்வளவு கவர்ச்சிகரமாக இருக்காது என்று தெரிவித்துள்ளது.

மேலும், இப்பகுதிகளில் உள்ள தங்கள் வாடிக்கையாளர்கள் தங்களது தொழில்நுட்ப செலவுகளை ஒன்று கடுமையாக குறைப்பார்கள் அல்லது ஒத்திப் போடுவார்கள், மற்றபடி நிறுவனத்தின் வர்த்தக ஆரோக்கியத்தை கட்டுப்படுத்தும் காரணிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்காத காரணிகளாக இருக்கும், அதாவது அரசியல் நிர்ணயமின்மைகள், இந்தியாவில் கொள்கைகளில் மாற்றம், பிறநாட்டில் பொருளாதார நிலைமைகள் ஆகியவை நிறுவனத்தை பாதித்தாலும் அதனை தாங்கள் கட்டுப்படுத்த முடியாது என்றி விப்ரோ தங்கள் அறிக்கையில் கூறியுள்ளது.

SCROLL FOR NEXT