உணவகங்களில் அளிக்கப்படும் சேவை திருப்திகரமாக இல்லை யெனில், சேவைக் கட்டணம் அளிக்கத் தேவையில்லை என்று மத்திய நுகர்வோர் விவகாரத்துறை நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தது. இது குறித்து கருத்து தெரிவித் துள்ள இந்திய ஓட்டல்கள் கூட்டமைப்பு, `சேவைக்கட்டணம் செலுத்த விருப்பம் இல்லை எனில், சாப்பிட வேண்டாம்’ என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவு 85 லட்சம் ஓட்டல் பணியாளர்களின் வாழ்க்கையை பாதிக்கும் என்று கூறியுள்ளது.
சேவைக் கட்டணம் தொடர்பாக மத்திய அரசு அளித்த விளக்கத்தில், சேவைக் கட்டணத்தை கட்டாயமாக நுகர்வோரிடமிருந்து வசூலிப்பது முறையற்ற வர்த்தக நடவடிக்கை யாகும் என்று கூறியுள்ளது. சேவைக் கட்டணம் என்பது வாடிக்கையாளருக்கு அளிக்கப் படும் சேவை திருப்திகரமாக இருக் கும்பட்சத்தில் வசூலிக்கப்பட வேண்டியதாகும். இதை அளிப்பது குறித்து நுகர்வோர் தீர்மானிக்க லாம் என்று இந்திய ஹோட்டல் சங்கமும் தெரிவித்திருந்தது. சேவையில் குறைபாடு இருந்தா லும் 5% முதல் 20% சேவைக் கட்டணம் கட்டாயமாக வசூலிக்கப் படுகிறது என நுகர்வோரிடமிருந்து புகார் வந்ததன் அடிப்படையில் நுகர்வோர் விவகார அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்தது.
இது தொடர்பாக பேசிய இந்திய ஓட்டல்கள் கூட்டமைப்பு தலைவர் ரியாஸ் அம்லானி, இந்த உத்தரவு ஓட்டல் துறையில் பணியாற்றும் 85 லட்சம் ஊழியர்களைப் பாதிக்கும் என்றும், இதை கவனத்தில் கொள் ளாமல் உத்தரவு அளிக்கப்பட்டுள் ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். சேவைக் கட்டணம் என்பது உரிமை யாளருக்கு மட்டுமல்ல, துப்புரவு பணி உள்ளிட்ட இதர சேவைகளில் உள்ள பணியாளர்கள் அளிக்கும் சேவைகளுக்கும் சேர்த்துதான் வசூலிக்கப்படுகிறது. சேவைக் கட்டணம் வசூலிக்கவில்லை என் றால் இவர்களின் வாழ்வாதாரத் துக்கு என்ன செய்வது என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
சேவைக்கட்டணம் தொடர்பான இந்த உத்தரவை மெனு கார்டு மற்றும் வாடிக்கையாளர் பார்வை படும் இடத்தில் தெரியப்படுத்த வேண்டும் என்று உத்தரவில் கூறப் பட்டுள்ளது. இது குறித்து குறிப் பிட்ட அம்லானி, வாடிக்கையாளர் கள் சேவையை பெறுவதற்கு முன் னரே இந்த உத்தரவு குறித்து தெரிந்து கொள்வர். அதன்பிறகு தனது விருப்பபடி சேவையை பயன்படுத்தலாம் அல்லது பயன் படுத்தாமல் போகலாம். எனவே உத்தரவுபடி சேவை கட்டணம் வேண்டுமா வேண்டாமா என்பதை ஓட்டல்கள் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
இது தொடர்பாக கருத்து தெரி வித்த நம்பர் 31 ஓட்டல் உரிமை யாளர் சிவம் பாஸ்கர், இந்த உத்தரவு காரணமாக ஓட்டல்துறை ஊதியங்களில் நெருக்கடிகள் உரு வாகும். ஊழியர்களின் ஊதியம் மறுசீரமைப்புக்கு ஆளாகும் என் றார். மற்றொரு ஓட்டல் உரிமை யாளர் பேசும்போது, சேவைக்கட்ட ணம் வசூலிக்க வேண்டுமா, வேண் டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும். ஆனால் இந்த உத்தரவு தெளிவாக இல்லை. ஒரு வாடிக்கை யாளர் சாப்பிடும் உணவு அனைத் தும் சிறப்பாக இருந்து, ஏதாவது ஒரு உணவு நன்றாக இல்லை என கருதுகையில் என்ன முடிவுக்கு வர முடியும். வாடிக்கையாளர்கள் வரி விகிதம் அதிகமாக இருக்கிறது என்று கருதுகிறார்களே தவிர சேவைக்கட்டணம் அதிகம் என்று கூறுவதிலை என்றும் கூறினார்.