மின்னணு தொழில்நுட்பத் துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ஐபிஎம் தனது நிறுவனப் பணியாளர்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.
மொத்தம் 15 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்தியா, ஐரோப்பா மற்றும் பிரேஸில் ஆகிய நாடுகளில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றுவோரைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் லீ கோன்ராட் தெரிவித்தார்.
கடந்த மாதம் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் தனக்கு போனஸ் வேண்டாமென்று தெரிவித்தார். நிறுவனத்தை 100 கோடி டாலர் மதிப்பீல் சீரமைக்க திட்டமிட்டுள்ளது. சர்வர் மற்றும் ஸ்டோரேஜ் சிஸ்டம் விற்பனை சரிந்து வருவதையடுத்து இத்தகைய முடிவை ஐபிஎம் எடுத்துள்ளது. உலகம் முழுவதும் ஐபிஎம் நிறுவனத்தில் 4 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இந்தியாவில் எத்தனை பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளார்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
இருப்பினும் ஐபிஎம் பெங்களூர் அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி 50 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கான நோட்டீஸ் தரப்பட்டுள்ளது.