வணிகம்

செபி பிடி இறுகுகிறது

செய்திப்பிரிவு

பங்குச் சந்தை மூலம் பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி அளிப்பது, அன்னியச் செலாவணி மோசடிகளில் ஈடுபடுவது போன்ற நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக தனது கண்காணிப்பு நடவடிக்கைகளை பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியம் (செபி) கடுமையாக்கியுள்ளது.

இதற்காக பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களில் முதலீடு செய்வோர் உள்ளிட்ட விவரங் களை கண்காணிக்குமாறு செபி அறிவுறுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக சர்வதேச தடைகளுக்கு உள்ளான நாடுகளிலிருந்து மேற்கொள்ளப்படும் நிதி பரிவர்த்தனை களை கூர்ந்து கவனிக்குமாறு குறிப்பிட்டுள்ளது.

செபி விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளின்படி நிறுவனங்கள் செயல்படுகின்றனவா என்பதை ஆராய்வதற்கு உரிய இயக் குநர்களை நியமிக்குமாறும் செபி குறிப்பிட்டுள்ளது. இதுதவிர, பங்குச் சந்தைகள் அனைத்தும் பல்வேறு நிறுவனங்களின் அரையாண்டு தணிக்கை உள்ளிட்ட விவரங்களை செபிக்கு தெரிவிக்குமாறு வற்புறுத்தப் பட்டுள்ளன.

புதிய விதிமுறைகள் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பொதுத்தேர்தலுக்கு முன்பாக அமலுக்குவந்துள்ளன. பொதுவாக பொதுத் தேர்தலின் போது அன்னியச்செலாவணி மோசடி பங்குச் சந்தை மூலமாக நடைபெறும். அதைக் கட்டுப் படுத்துவதற்காக விதிமுறைகளை செபி கடுமையாக்கியுள்ளது.

SCROLL FOR NEXT