வணிகம்

இவரைத் தெரியுமா?- தெரசா கிளாரா பார்ஜெர்

செய்திப்பிரிவு

சர்வதேச அளவில் முதலீடு களை மேற்கொள்ளும் கார்டிகா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி.

உலக வங்கியின் சர்வதேச நிதிக் கழகத்தில் 21 ஆண்டு கள் பணியாற்றிவர். நிறுவனத் தின் பல முக்கிய பொறுப்பு களை வகித்தவர். ஜெம்லாக் பாண்ட் ஃபண்டை அறிமுகப் படுத்தியவர். நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு பிரிவு ஆலோசனைக் குழுவிலும் இருந்தார்.

வளரும் நாடுகளின் நிறுவனங்களில் முதலீடு செய்வதில் அனுபவம் கொண்டவர். வளரும் நாடுகளில் முதலீடுகளை மேற்கொள்ளும் கூட்டமைப்பின் (EMPEA) இணை நிறுவனர். இந்த நிறுவனத்தின் சர்வதேச உறவுகள் குழுவின் உறுப்பினர்.

மெக்கென்ஸி நிறுவனத்தில் பணியாற்றி அனுபவம் கொண்டவர்.

சர்வதேச அளவிலான தொழில் தலைவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பசிபிக் பென்ஷன் அண்ட் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர்.

அமெரிக்காவின் கெய்ரோ பல்கலைக் கழகம், காஸேல் பைனான்ஸ் ஆகியவற்றின் ஆலோசனைக் குழுவிலும் உள்ளார்.

யேல் மேலாண்மை பள்ளியில் எம்பிஏ பட்டம் பெற்றவர், ஹார்வேர்டு பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி முடித்தவர். கெய்ரோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார்.

SCROLL FOR NEXT