அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது. இன்று காலை அந்நிய செலாவணி சந்தையில் வர்த்தக நேர துவக்கத்தின் போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 31 காசுகள் அதிகரித்து 62.15 என்ற நிலையில் இருந்தது.
ஏற்றுமதியாளர்கள் மத்தியில் டாலர் விற்பனை அதிகரித்துள்ளதால் இந்திய ரூபாயின் மதிப்பு ஏற்றம் கண்டுள்ளதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.