2017-18-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வேளாண்மை, ஊரகம் மற்றும் வேளாண் சார்ந்த துறைகளுக்கு மொத்தம் ரூ.1,87,223 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 24 சதவீதம் அதிகம்.
அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க அரசு உறுதிபூண்டுள்ளது.
வேளாண் தொழிலுக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ.10 லட்சம் வரை வேளாண் கடன் வழங்கப்படும்.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜான திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன்களை திருப்பி செலுத்துவதற்கான உச்சவரம்பு காலத்தை 15 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக நீட்டிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நபார்டு வங்கி மூலம் அர்ப்பணிக்கப்பட்ட நுண்ணிய பாசன நிதியம் அமைக்கப்படும். இதன் மூலம் ஒரு துளியில் அதிக விளைச்சல் என்ற இலக்கை எட்ட முடியும். இதற்கு ஆரம்ப மூலதனமாக ரூ.5,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நபார்டு வங்கி மூலம் ரூ.8,000 கோடி ஒதுக்கீட்டில் பால் பொருட்கள் பதனிடும் உள்கட்டமைப்பு நிதியம் அமைக்கப்படும்.
கிருஷி விஞ்ஞான் மையங்கள் மூலம் சிறிய பரிசோதனை கூடம் அமைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள் வழங்கப்படும்.
30 சதவீதமாக உள்ள பசல் பீமா யோஜனா திட்டம் 40 சதவீதமாக அதிகரிக்கப்படும்.