டாடா குழும நிறுவனமான டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை வகிக்கிறார்.
இதற்கு முன்பு ஐஷர் குழும நிறுவனங்களின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தார்.
ரூர்கி ஐஐடி கல்வி நிறுவனத்தில் மெக்கானிக்கல் இன்ஜினீரிங் பட்டம் பெற்றவர்.
இந்திய தொழில் கூட்டமைப்பில் (சிஐஐ) தலைவராக இருந்தவர், இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர், டிராக்டர் உற்பத்தியாளர்கள் சங்க துணைத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
பல்வேறு ஐஐஎம், ஐஐடி, மேலாண்மை, தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு ஆலோசகராக உள்ளார். ஐஐஎம் காஷிபூர் மாற்றும் ஜாம்ஷெட்பூர் எக்ஸ்எல்ஆர்ஐ நிறுவனங்களில் இயக்குநர் குழுவில் உறுப்பினராகவும் இருக்கிறார்.
டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், லார்சன் அண்ட் டூப்ரோ மற்றும் சன்போர்ன் எனர்ஜி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் அங்கம் வகிக்கிறார்.