வணிகம்

டெலிவரி ஊழியர்களை பாதுகாக்கும் ‘நஞ்சுண்டா’ திட்டத்தை அறிமுகம் செய்தது பிளிப்கார்ட்

ஐஏஎன்எஸ்

பிளிப்கார்ட் நிறுவனம் தங்களது டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பு தேவைகளுக்காக `புராஜெக்ட் நஞ் சுண்டா’ என்கிற திட்டத்தை அறி முகம் செய்துள்ளது. இந்த திட்டத் தின் கீழ் அவசர காலங்களில் டெலி வரி ஊழியர்கள் / களப்பணியாளர் கள் அருகிலுள்ள டெலிவரி மையங் களில் உதவிகளை கோர முடியும். இந்த திட்டத்துக்கு பெங்களூரு விஜயநகரில் சமீபத்தில் கொலை செய்யப்பட்ட களப்பணியாளர் நஞ்சுண்ட ஸ்வாமி பெயரைச் சூட்டியுள்ளது.

இது தொடர்பாக பேசிய நிறு வனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி நிதின் சேத், களப்பணி யாளர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதை நிறுவனம் உணர்ந்துள்ளது. இதன் மூலமே களப்பணியில் அனைத்து இடங்களுக்கும் சிறந்த சேவையை கொண்டு சேர்க்க முடியும். இதன் மூலமே வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற முடியும். இதற்காக எங்களது களப்பணியாளர்களின் மொபைல் போனில் அவசர கால அழைப்பு பட்டன் (எஸ்ஓஎஸ்) செயலி மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு நஞ்சுண்டா என பெயர் சூட்டியுள்ளோம் என்று கூறினார்.

களப்பணியாளர்கள் அவசர காலங்களில் நஞ்சுண்டா பட்டனை அழுத்துவதன் மூலம் அருகிலுள்ள களப்பணியாளர்கள் மற்றும் விநியோக மைய பொறுப்பாளருக்கு எஸ்எம்எஸ், இமெயில் மூலம் அவசர செய்திகள் சேரும்.

கட்ந்த மாதம் பிளிப்கார்ட் நிறுவனத்தில் ரெட்மி நோட் 3 செல்போனை ஆர்டர் செய் திருந்த வருண் என்கிற வாடிக்கை யாளருக்கு போனை டெலிவரி செய்ய சென்றபோது நஞ்சுண்டசாமி அடித்து கொலை செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT