வணிகம்

இவரைத் தெரியுமா?- வோல்ஃப்காங் புரோக்-ஷாயர்

செய்திப்பிரிவு

முன்னணி விமான போக்குவரத்து சேவை நிறுவனமான கோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர். 2015-ம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2013-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 2015-ம் ஆண்டு மே மாதம் வரை ஏர் பெர்லின் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

2012-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை இதே நிறுவனத்தின் உத்திகள் வகுக்கும் பிரிவின் தலைவராகவும் இருந்தவர்.

2009-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து 2012-ம் ஆண்டு வரை பிரிட்டிஷ் மிட்லேண்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

2003-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

1981-ம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக துணைத்தலைவராக தனது பணியைத் தொடங்கியவர்.

வியன்னா பல்கலைக்கழகத்தில் பொருளாதார பிரிவில் இளநிலை பட்டமும் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.

SCROLL FOR NEXT