டாடா குழும நிறுவனங்களின் பங்குதாரர் பட்டியலை சீர் செய்ய தாய் நிறுவனமான டாடா சன்ஸ் முடிவெடுத்திருக்கிறது. இதன்படி ஒரு டாடா நிறுவனத்தில் மற்றொரு டாடா நிறுவனத்தின் பங்குகள் இருக்கும் பட்சத்தில் அந்த பங்குகளை வாங்க டாடா சன்ஸ் முடிவெடுத்திருக்கிறது.
இதன்படி, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஸ்டீல் நிறு வனம் 2.85% பங்குகளை வைத் திருக்கிறது. இந்த பங்குகளை ஜூன் 23 அல்லது அதன் பிறகு டாடா சன்ஸ் வாங்கிக்கொள்ளும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத் தில் டாடா சன்ஸ் 28.2 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. டாடா ஸ்டீல் வசம் இருக்கும் 2.85 சதவீத பங்குகளை வாங்கும் பட்சத்தில் டாடா சன்ஸ் வசம் 31.06 சதவீத பங்குகள் இருக்கும். வெள்ளிக்கிழமை 455.75 ரூபாயில் டாடா மோட்டார்ஸின் வர்த்தகம் முடிந்தது. எந்த விலைக்கு டாடா சன்ஸ் வாங்குகிறது என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அதேபோல டாடா ஸ்டீல் நிறுவனத்தில் 0.46 சதவீத பங்குகளை டாடா மோட்டார்ஸ் வைத்திருக்கிறது.