வணிகம்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மெர்சிடஸ் பென்ஸ் ‘நியூ இ-கிளாஸ்’ சென்னையில் அறிமுகம்

செய்திப்பிரிவு

சொகுசு கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மெர்சிடஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியர்களுக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பென்ஸ் ‘நியூ இ-கிளாஸ்’ காரை சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியா வுக்காக வலது புறத்தில் ஸ்டீரிங் வீல் கொண்டதாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கார் உருவாக்கத்துக்கு 48 மாதங்கள் ஆனதாக மெர்சிடஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் சந்தைப் பிரிவு துணைத் தலைவர் மைக்கேல் ஜோப் காரை அறிமுகப்படுத்தி பேசுகையில் கூறினார்.

இ-கிளாஸ் கார் கடந்த 20 ஆண்டு களுக்கும் மேலாக விற்பனையாகி வருகிறது. சர்வதேச அளவில் 1.30 கோடி கார்கள் விற்பனையாகி யுள்ளன. இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் 34 ஆயிரம் கார்கள் விற்பனையாகியுள்ளன. இப்போது அறிமுகமாகியுள்ள புதிய இ-கிளாஸ் 10-வது தலைமுறையைச் சேர்ந்ததாகும். ஏற்கெனவே உள்ள மாடல்களைக் காட்டிலும் இது நீளம் அதிகம். பல்வேறு தொழில்நுட்ப சிறப்பம்சங்கள் இதில் உள்ளன. 140 மி.மீ அதிகமான நீளம் இருப்பதால் இது சொகுசான பயணத்தை உறுதி செய்கிறது. மேலும் பின் இருக்கை 37 டிகிரி சாயும் வகையில் வடிவமைக்கப்பட்டது. 9 கியர்கள் உள்ளதால் 6.6 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட முடியும். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மொத்தம் 7 காற்றுப் பைகள் (ஏர் பேக்) இதில் உள்ளன. இதில் 60 சதவீத பாகங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

விற்பனைக்குப் பிறகு சிறப்பான சேவை கிடைக்க வசதியாக இரண்டு ஆண்டுகளுக்கான பேக்கேஜ் ரூ. 64,700க்கு கிடைக்கிறது. டீசல் காருக்கு ரூ.94,400 செலவிட்டால் போதுமானது.

இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து இதுவரை 500 கார்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தின் பங்களிப்பு 8 சதவீத மாகும். 5 தென் மாநிலங்களின் பங்கு 30 சதவீதம் என்று ஜோப் கூறினார்.

இணையதளம் மூலமான விற்பனையில் இதுவரை 700 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சொகுசு கார்களை வாங்கு வோருக்கு 70 சதவீத அளவுக்கு கடன் வசதி அளிக்கப்படுகிறது. இதனால் பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது விற்பனை யில் பெருமளவு பாதிப்பு இல்லை என்றும் ஜோப் கூறினார்.

புதிய இ-கிளாஸ் பெட்ரோல் மாடல் காரின் சென்னை விற்பனையக விலை ரூ. 57.71 லட்சமாகும். டீசல் மாடல் விலை ரூ. 71.40 லட்சமாகும்.

SCROLL FOR NEXT