கடும் தண்ணீர் தட்டுப்பாடு காரண மாக, கரூர் மாவட்டம் புகழூர் தமிழ் நாடு செய்தித்தாள் காகித நிறுவனத் தில் (டிஎன்பிஎல்) விரைவில் உற்பத்தி நிறுத்தப்பட உள்ளது.
பருவமழை குறைவு, மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததால் காவிரியில் குறைந்தளவு தண்ணீர் திறப்பு மற்றும் வறட்சி காரணமாக கரூர் மாவட்டத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
“தண்ணீர் தட்டுப்பாடு காரண மாக கடந்த ஆண்டும் இதேபோல உற்பத்தி நிறுத்தப்பட்டது. அதே போல, இந்த ஆண்டும் தற்போது ஒரு இயந்திரத்தின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் மற்ற 2 இயந்திரங்களின் உற்பத்தி யும் நிறுத்தப்படும். தண்ணீர் தட்டுப்பாடு நீங்கிய பின் உற்பத்தி தொடங்கும்,” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.