வோடபோன் குழுமம் இந்திய நிறுவனத்தில் ரூ.47,700 கோடி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் பாதிக்குள் இந்த முதலீடு மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ வருகைக்கு பிறகு இந்த முதலீடு அறிவிப்பு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு வந்திருக்கும் மிகப்பெரிய அந்நிய முதலீடு இது வாகும். தொழில்நுட்பம், ஸ்பெக்ட்ரம், விரிவாக்க பணிகளுக்காக இந்தத் தொகை பயன்படுத்தப்படும் என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுனில் சூட் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது: நிறுவனத்தின் கடன் இப்போதைக்கு ரூ.25,000 கோடி அளவுக்கு இருக்கிறது. பொதுபங்கு வெளியிடுவதற்கு எந்தவித காலக்கெடுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. ஆனால் அதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம் என்றார்.