இந்தியாவில் கடந்த ஒரு ஆண்டில் 37 செல்போன் தயாரிப்பு ஆலை களும், 1.65 லட்சம் வேலை வாய்ப்புகளும் உருவாக்கப் பட்டுள்ளன என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். சிறப்பான முதலீடுகளை ஈர்த்துள்ளதன் மூலம் 40 ஆயிரம் நேரடி வேலைவாய்ப்புகளும், 1.25 லட்சம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்புகளும் உருவாகியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
`மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் மிகப் பெரிய மின்னணு உற்பத்தி கேந்திரங்களை கொண்டு வர முடிவெடுத்தோம் என்றும் கூறினார். மின்னணு துறையில் தொழில்முனைவில் ஈடுபடும் புதிய தொழில்முனை வோர்களுக்கு உதவும் விதமாக மத்திய அரசின் உதவியின் கீழ் அமைக்கப்பட்டுள்ள மின்னணு உற்பத்தியாளர்கள் பூங்கா தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் இந்த தகவலைக் குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறியதாவது: கடந்த ஒரு ஆண்டில் இந்தியாவில் 11 கோடி செல்போன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டு 6 கோடி செல்போன்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. சீன நிறுவனங்களான ஜியோனி மற்றும் ஜியோமி நிறுவனங்கள் ஆந்திர பிரதேசத்தில் அமைந்துள்ள பாக்ஸ் கான் ஆலையில் தங்களது செல் போன்களை தயாரிக்கின்றன. தவிர உள்நாட்டு செல்போன் உற்பத்தி நிறுவனங்களான கார்பன், லாவா, மைக்ரோமேக்ஸ், இண்டெக்ஸ், ஜைவ், ஐடெல், மற்றும் எம் டெக் நிறுவனங்கள் நாடு முழுவதும் பல இடங்களில் தங்களது ஆலை களை அமைத்துள்ளன. குறிப்பாக, மின்னணு பொருட்கள் இந்தியா வில் தயாராவது மட்டுமல்ல, அதற் கான வடிவமைப்புகளும் இந்தியா வில் மேற்கொள்ளப்படுகின்றன.
மின்னணு துறையில் தொழில் முனைவில் ஈடுபடும் புதிய தொழில் முனைவோர்களுக்கு உதவும் விதமாக மின்னணு மேம்பாட்டு நிதி என 10,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
புதுடெல்லி பல்கலைக்கழகத் தில் தெற்கு வளாகத்தில் புதிதாக `எலக்ட்ரோபெர்னர் பார்க்’ என மின்னணு துறையில் ஈடுபடும் புதிய தொழில்முனைவோர்களுக்கான ஊக்குவிப்பு மையத்தை உருவாக் கியுள்ளது. மத்திய அரசின் ரூ.21 கோடி நிதி உதவியுடன் உருவாகி யுள்ள இந்த மையம் 50 புதிய நிறுவனங்களுக்கு உதவும் என்று இதன் தொடக்க நிகழ்ச்சியில் குறிப்பிட்டார். கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்த மையத்தை இந்திய எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் செமி கன்டக்டர் கூட்டமைப்பு உருவாக்கியுள்ளது.
இந்தியா ஆண்டுக்கு ரூ.3 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட் களை இறக்குமதி செய்கிறது. 2020 ஆம் ஆண்டுக்குள் இறக்கு மதியை முற்றிலும் நிறுத்த அரசு திட்டுமிட்டுள்ளது. `எலெக்ட்ரோ பெர்னர் பார்க்’ இந்த இலக்கை நோக்கி முதல் அடியை எடுத்து வைத்துள்ளது என்று மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்ட துறை இணையமைச்சர் பி.பி.சவுத்ரி கூறினார்.
இந்த மையத்தின் மூலம் தங் களது தயாரிப்புகளை மேபடுத்த முதற்கட்டமாக ஆறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களை அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. சீன நிறுவன மான லீஎகோ சமீபத்தில் ஒரு ஆலையை அமைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.