வணிகம்

தொழில்நுட்ப துறையில் ஸ்டார்ட்அப் இந்தியாவுக்கு மூன்றாவது இடம்

பிடிஐ

சர்வதேச அளவில் தொழில்நுட்ப துறையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்குவதில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தொழில்துறை அமைப்பான அசோசேம் மற்றும் தாட் ஆர் பிட்டேரேஜ் ஆராய்ச்சி கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வில் தொழில்நுட்ப துறையில் ஸ்டார்ட்அப் தொடங்குவதில் அமெ ரிக்கா முதலிடத்தையும் இங்கி லாந்து இரண்டாவது இடத்திலும் உள்ளதாக தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்தியா வில் தொழில்நுட்ப துறையில் புதிய நிறுவனங்கள் பெங்களூரு வில் அதிக அளவில் தொடங்கப் படுவதாகவும், டெல்லி மற்றும் மும்பை ஆகியவை அடுத்தெடுத்த இடங்களில் இருப்பதாகவும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஹைதராபாத் மற் றும் சென்னை ஆகிய நகரங்களி லும் தொழில்நுட்ப தொழில்முனை வோர்கள் உருவாகி வருவதாகவும் தெரியவந்துள்ளது.

முதலிடத்தில் உள்ள அமெரிக் காவில் 47,000-க்கும் மேல் ஸ்டார்ட் அப்கள் தொழில்நுட்ப துறையில் தொடங்கப்பட்டுள்ளன. இரண்டா வது இடத்தில் உள்ள இங்கிலாந் தில் 4,500 ஸ்டார்ட்அப்கள் தொழில் நுட்ப துறையில் தொடங்கப்பட் டுள்ளன. மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவில் 4,200 ஸ்டார்ட் அப்கள் தொடங்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக ஸ்டார்ட்அப் தொடங்குவதில் (தொழில் நுட்பம் அல்லாத ஸ்டார்ட்அப் நிறுவனங் களையும் சேர்த்து) சர்வதேச அள வில் முதல் ஐந்து இடங்களில் இந்தியா இருக்கிறது. இந்தப் பட்டியலில் சீனாவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டார்ட்அப் இந்தியா, மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா ஆகிய திட்டங்கள் புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிப் பதாக அமைந்துள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆராய்ச்சிகளுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டியதையும் மற்றும் புதிய ஐடியாக்களை ஊக்குவிக்க வேண்டும் என்று இந்த ஆய் வின் மூலம் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT