வணிகம்

இப்படியும் செலவைக் குறைக்கலாம்

டி.கே

கால் மனை வைத்துள்ளவர்கள் கூட இன்று கவலைகொள்ளும் விஷயம் எகிறும் கட்டுமானச் செலவு. ஆயிரத்தில் கணக்கு போட்டால் லட்சத்திலும், சில லட்சங்களில் கணக்கு போட்டால் பல லட்சங்களிலும் செலவை அதிகரிக்கும் சக்தி கட்டுமானப் பணிகளுக்கு மட்டுமே உண்டு. ஆனாலும், கட்டுமானத்தில் செலவைக் குறைக்க வழிகள் இல்லாமல் இல்லை. அந்த வகையில் இங்கிலீஷ் பாண்ட் எனப்படும் கட்டுமானத் தொழில்நுட்பம் செலவைக் குறைக்கும் ஒரு தொழில்நுட்பமாக இருக்கிறது.

பழைய காவல் நிலையங்களைப் பார்த்திருக்கிறீர்களா? சிவப்பு வண்ணத்தில் வெள்ளைக் கோடுகள் வரைந்தது போல இருக்கும். அதுபோன்ற பாணியில் செங்கல்லை வைத்துக் கட்டுவதுதான் இங்கிலீஷ் பாண்ட் முறை. இந்த முறையில் நெருக்கமாகச் செங்கல் வைத்துக் கட்டப்படும். இதற்குப் பதிலாக ரேட் ட்ராப் பாண்ட் முறையில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும்போது செங்கல் தேவை குறையும். இந்த முறையில் இரண்டு குறுக்குச் செங்கற்களுக்கு ஒரு செங்கல் அளவு இடம் விட்டுக் கட்டடம் கட்டுவார்கள். இதனால் செங்கல் தேவை மட்டுமின்றி சிமெண்ட் தேவையும் கணிசமாகக் குறையும் என்கின்றனர் கட்டுநர்கள். இதனால் செலவும் குறையும். இந்த முறையில் இன்னொரு சிறப்பும் இருக்கிறது. தட்பவெப்ப நிலையைச் சீராக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.

கட்டுமானச் செலவைக் குறைப்பதில் இது ஒரு உத்திதான். கட்டுமானச் செலவைக் குறைக்க என்னென்ன வழிமுறைகள் இருக்கின்றன என்பதைத் தேடிச் செயல்படுத்து வதன் மூலம் சுமார் 20 சதவீத அளவுக்குச் செலவைக் குறைக்கலாம்.

SCROLL FOR NEXT