மகாராஷ்டிரம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது, டீசல் மீதான விலைக் கட்டுப்பாட்டை நீக்கியது, எரிவாயு விலையை உயர்த்தியது ஆகிய காரணங்களால் நேற்று இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்து முடிந்தன.
சென்செக்ஸ் 321 புள்ளிகள் உயர்ந்து 26429 புள்ளியிலும், நிப்டி 99 புள்ளிகள் உயர்ந்து 7879 புள்ளியிலும் முடிவடைந்தன. மிட்கேப் குறியீடு 1.44 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 0.48 சதவீதமும் உயர்ந்து முடிவடைந்தன.துறைவாரியாக பார்க்கும் போது ஐடி துறையை தவிர மற்ற அனைத்துறை பங்குகளும் உயர்ந்து முடிந்தன. ஆட்டோ, வங்கி, கேபிடல் குட்ஸ், ஆயில் அண்ட் கேஸ், மெட்டல், மின்சாரம் மற்றும் ஹெல்த்கேர் குறியீடுகள் 1 முதல் 2 சதவீதம் வரை உயர்ந்து முடிவடைந்தன.
டீசல் விலை கட்டுப்பாட்டை நீக்கியதால் அந்த துறை பங்குகள் உயர்ந்து முடிவடைந்தன. ஓ.என்.ஜி.சி பங்கு 5.4 சதவீதமும், ஹெச்.பி.சி.எல். 7.38%, பிபிசிஎல் 4.51%, ஐஓசி 3.80 சதவீதமும் உயர்ந்து முடிவடைந்தன.
சென்செக்ஸ் பங்குகளில் ஓ.என்.ஜி.சி., ஹிண்டால்கோ, டாடா மோட்டார்ஸ், ஆக்ஸிஸ் வங்கி மற்றும் எல் அண்ட் டி ஆகிய பங்குகள் உயர்ந்தும், விப்ரோ, இன்போசிஸ், டிசிஎஸ், ஐடிசி மற்றும் ரிலையன்ஸ் ஆகிய பங்குகள் சரிந்தும் முடிவடைந்தன.