நேற்றைய பங்கு சந்தை வர்த்தக முடிவில் ஐடி நிறுவன பங்குகள் அதிகபட்சம் 4 சதவீதம் சரிவைக் கண்டன.
நேற்று முன்தினம் ஹெச் 1 பி விசா மசோதா திருத்தங்களுடன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் மறு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதாவில் அயல்நாட்டு ஊழியர்கள் மற்றும் அயல்நாட்டு வர்த்தகம் தொடர்பான திருத்தங்கள் செய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக இந்திய ஐடி நிறுவன பங்குகள் சரிவைக் கண்டன.
இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு 2.50 சதவீதமும், டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு 2.18 சதவீதமும், விப்ரோ நிறுவனத்தின் பங்கு 2.18 சதவீதமும் சரிவைக் கண்டன. ஐடி துறை குறியீடு 2.54 சதவீதம் குறைந்து 9,880.61 புள்ளியில் நிறைவடைந்தது.
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் டெக்னாலஜி ஆகிய நான்கு நிறுவனங்களின் சந்தை மதிப்பு நேற்று ரூ.22,000 கோடி அளவுக்கு சரிந்தது.