இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் புதிய தலைவராக கணேஷ் குமார் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள ஆகாஷ் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் மற்றும் விஜய் சில்க்ஹவுஸ் குழுமத்தின் தலைவராக உள்ள இவர் கடந்த 1-ம் தேதி தனது புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்கு அவர் இப்பதவியை வகிப்பார்.
ஏற்கனவே இவர் இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் மேற்குப் பிராந்திய மண்டல தலைவராக பதவி வகித்துள்ளார். அத்துடன், இவர் டெக்ஸ்டைல்ஸ் கமிட்டியின் தலைவராகவும், பட்டு ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். சென்னையில் உள்ள பரீதா குழுமத்தின் தலைவர் எம்.ரபீக் அகமது துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பதவியேற்றவுடன் கணேஷ் குமார் குப்தா கூறும்போது, நடப் பாண்டில் நாட்டின் ஏற்றுமதி 500 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-17ம் நிதியாண்டில் 275 பில்லி யன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது’ என்றார்.