வணிகம்

அமெரிக்க வர்த்தக கூட்டம்: திருப்பூர் தொழில் துறையினருக்கு அழைப்பு

செய்திப்பிரிவு

அமெரிக்காவில் நடைபெற உள்ள சர்வதேச வர்த்தக சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்க திருப்பூர் தொழில் துறையினருக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகமான ஏ.இ.பி.சி சார்பில் அதன் மூத்த இயக்குநர் ஆர்.ஜி.ரெட்டி திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினருக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அமெரிக்காவில் உள்ள லாஸ் வெகாஸ் பகுதியில் நெவேடா நகரில் அடுத்த 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ந்தேதி முதல் 19ந்தேதி வரை சர்வதேச அளவிலான வர்த்தக சந்திப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், 40 நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் தங்கள் படைப்புகளை அறிமுகம் செய்ய உள்ளன.

சுமார் 1,100க்கும் மேற்பட்ட ஆயத்த ஆடை பொருட்கள் இந்த கண்காட்சி மூலம் அறிமுகமாக உள்ளன. சர்வதேச அளவில் நடைபெறும் முக்கிய கண்காட்சி மற்றும் வர்த்தகர் சந்திப்பு கூட்டம் என்பதால் திருப்பூர் பின்னலாடை பொருட்களை அங்கு அறிமுகம் செய்ய நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அரங்கு அமைக்க விரும்புபவர்கள் மேலும் விபரங்களுக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT