எப்.எம்.சி.ஜி துறையில் இருக்கும் முன்னணி நிறுவனமான கெவின் கேர் ரீடெய்ல் துறையில் கள மிறங்குகிறது. ``கெவின் பார்லர்’’ என்னும் பெயரில் இந்தியா முழுக்க 50 ரீடெய்ல் கடைகளை திறக்க முடிவு செய்திருக்கிறது
இந்த கடைகளில் கெவின் கேர் நிறுவனத்தின் பொருட்களாக பால், பானங்கள், ஸ்நாக்ஸ் மற்றும் உணவுப்பொருட்கள் கிடைக்கும். மற்ற நிறுவனங்களுக்கு ஸ்டாகிஸ்ட் போலவும் இந்த ரீடெய்ல் நிறுவனங்கள் செயல்படும். இவற்றில் சில சொந்தமாகவும், சில பிரான்ஸைசி மூலமாகவும் அமைக்க திட்டமிட்டிருக்கிறது.