சாம்சங் நிறுவனம் கேலக்ஸி `சி7 புரோ’ என்னும் புதிய ஸ்மார்ட்போனை புதுடெல்லியில் நேற்று அறிமுகம் செய்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து `சி’ வரிசை ஸ்மார்ட்போன்களை நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. ஜனவரி மாதம் சி9 புரோ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. கேலக்ஸி சி7 புரோ என்ற ஸ்மார்ட்போனை தற்போது வெளியிட்டுள்ளது.
கேலக்ஸி சி7 புரோ ஸ்மார்ட்போன் 7மிமீ தடிமன் கொண்டது. 5.7 இன்ச் தொடுதிரை வசதியும், கொரில்லா கிளாஸ் 4 வகையிலான டிஸ்பிளேயும் உள்ளது. ஆக்டா கோர் 2.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்நாப்டிராகன் 626 பிராசசர் இந்த ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ளது. 4ஜிபி ராம் மற்றும் 64 ஜிபி சேமிப்புத் திறன் கொண்டது. இந்த ஸ்மார்ட்போனின் எடை 172 கிராம். 16 எம்பி பின்பக்க கேமிரா வசதியுடன் எல்இடி பிளாஸ் வசதி உள்ளது.
கேலக்ஸி சி7 புரோ மிக எளி தான அதே சமயத்தில் சிறப்பான செயல்பாடுகளை அளிக்கும் வகை யில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று சாம்சங் இந்தியா நிறுவனத்தின் ஆன்லைன் வர்த்தக பிரிவின் துணைத்தலைவர் சந்தீப் சிங் அரோரா தெரிவித்தார்.