வணிகம்

இவரைத் தெரியுமா?- அனுஜ் பூரி

செய்திப்பிரிவு

முதலீட்டு ஆலோசனை மற்றும் கட்டுமான ஆலோசனை நிறுவனமான ஜேஎல்எல்-லின் இந்திய பிரிவு தலைவர்.

இதற்கு முன்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணி யாற்றினார். ரியல் எஸ்டேட் மற்றும் சமூக செயல்பாட்டு திட்ட ஆலோசனைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்டவர்.

செயலாக்கம், டெரிவேஷன் தேவைகள், பண்ட் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் உள்ளிட்ட வற்றில் வல்லுநர்.

2013-ம் ஆண்டிலிருந்து ஜார்கன் பிரகாஷன் நிறுவனத்தில் தினசரி பொறுப்புகள் இல்லாத கூடுதல் இயக்குநராகவும் உள்ளார்.

சிஐஐ அமைப்பின் மேற்கு மண்டல ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான கமிட்டியின் தலைவராகவும் உள்ளார்.

புதுடெல்லியில் உள்ள ராம் வணிகவியல் கல்லூரியில் பிகாம் பட்டம் பெற்றவர். இந்திய பட்டயக் கணக்காளர். அமெரிக்க மற்றும் இந்திய காப்பீடு கல்வி நிறுவனங்களில் பயிற்சி பெற்றவர்.

SCROLL FOR NEXT