செயல்களை எளிதாக்கு ஆனால் நீ எளியவனாக வாழாதே- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்ற மேதையின் மேற்கோளோடு சிக்கலான உலகில் வாழ்வதற்கு எளிதான விதிகளை SULL & EISENHARDT என்ற நூலாசிரியர்கள் சுவைப்பட கூறியுள்ளார்கள். எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பதில்லை ஆனால் கிடைக்கும் வாய்ப்புகளை எளிமையான முறையில் பயன்படுத்தி எளிமையான செயல்முறைகளால் மேலதிக பயன்பாடு பெறுபவர்கள் பெரு வெற்றி பெற்றவராக கருதப்படுகிறார்கள். அதே போல எளிதான விதிகள் என்று நூலாசிரியர்கள் கீழ்கண்டவைகளை கூறுகிறார்கள்.
வளங்களை சேமித்தல் (நேரம் மற்றும் சக்தி)
சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் சரி செய்து கொள்ளுதல்
குழப்பங்களை தவிர்த்து பிறகு ஏற்படும் தயக்கங்களை தாண்டிவருதல்
எல்லைக்கோட்டை வரைந்து எல்லைகளுக்குள் சிறப்பாக செயல்படுதல்
நெருக்கடியான நேரங்களில் மென்மையாக இணைந்து செல்லும் பாங்கை கையாளுதல்
இந்த ஐந்தும் இருந்தால் சிக்கலான உலகில் சிறப்பாக வாழலாம்.
நாளென்றுக்கு குறைந்த பட்சம் 8,500 செய்திகளை நாம் எதிர்க்கொண்டு நம் கவனத்திற்கு போட்டி வைக்கின்றோம். அந்த போட்டியில் நெருக்கடிகளும், சிக்கல்களும் மேலோங்கி நிற்கும். அது போன்ற நேரங்களில் ஐந்தில் ஒன்றையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவைகளையோ இணைத்து செயல்பட்டால் எளிதாக வாழ முடியும்.
அறுபது ஆண்டுகளுக்கு முன் WARREN WEVER என்ற ஆய்வாளர் ROCKFELLER அறக்கட்டளைக்காக மேற்கொண்ட ஆய்வில் இன்றைக்கும் பொருந்துமாறு முடிவுகளை சேர்த் திருக்கிறார். எளிதான மற்றும் நிரந் தரமில்லாத பிரச்சினைகளை எளிதில் தீர்க்க முடியும். இன்றைய மிகப் பெரிய கேள்வியே சிக்கலான பிரச்சினைகளை எளிதான செயல்முறைகளால் எவ்வாறு தீர்ப்பதே ஆகும்.
மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்ற முனைவர்கள் மாற்றம் என்பதை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய கேள்வி இந்த புத்தகத்தை இரண்டு மிகப்பெரிய பிரிவுகளாக பிரித்துக் கொள்ளலாம். முதல் பகுதி (பக்கம் 7 முதல் 82) குழப்பங்களை எவ்வாறு எதிர்க்கொள்ளுதல், வரையறை செய்தல் , விதிகளை தூக்கி எறிதல் போன்றவை பற்றி விளக்கமாக கூறுகிறார்கள்.
இரண்டாம் பகுதி (பக்கம் 99 முதல் 227) சிக்கலான உலகில் எவ்வாறு வாழ்ந்துக் காட்டுவது என்பது பற்றி ஆறு தலைப்புகளில் சுருக்கமாக கூறியுள்ளனர். குறிப்பாக பக்கம் 173 முதல் 227 வரை மாற்றங்களை ஏற்படுத்து வதற்கான வழிமுறைகளையும், விதி களை திரும்ப எழுதும் செயல்பாடுகளும், எளிமைக்கு எதிரான தடைகற்களையும் மிக அழகாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலே சொன்ன பக்கங்களில் எளிமை யான விதிகள் எவ்வாறு ஏற்படுத்தப் படுகின்றன என்பதை பற்றியும் அவற்றை எவ்வாறு செயல்முறை படுத்துவது என்பது பற்றியும் சிக்கலான உலகில் அவைகளை எதிர்கொண்டு பிரச்சினைகளை தீர்ப்பது பற்றியும் விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன.
எப்படி பின்பற்றுவது
உதாரணமாக, காலநிலை மாற்றம் என்பது ஒரு கட்டுக்கதை. உலகமயமாக் கல் என்பது கெட்ட செயல் போன்ற வைகளை நவீன வாழ்க்கை முறையில் எளிதாக ஏற்றுக் கொண்டு அடுத்ததை தேடி ஓட ஆரம்பிக்கிறார்கள், அப்பொ ழுது உலகமயமாக்கலின் நல்ல பயனை இழந்து கால நிலை மாற்றங்களால் ஏற்படும் விரும்பத்தகாத விளைவுகளை எதிர்கொண்டு வாழ்க்கையை நகர்த்துகிறார்கள். எளிதான விதிகள் இது போன்ற சச்சரவுகளில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
பெரிய நிறுவனங்களில் எளிமை யான வழிமுறைகளை செயல் படுத்து வது சில நேரங்களில் கடினமாக தோன் றலாம். ஆனால், முறைகளையும், செயல் பாடுகளையும் முனைந்து ஏற்படுத்தி யிருக்கும் பெரிய நிறுவனங்கள் எளிதில் பிரச்சினைகளை தீர்க்கலாம். சிறிய நிறுவனங்கள் குறைந்த அளவிலான நபர்களை பணி அமர்த்தியிருக்கும் சூழ்நிலையில் பெரும்பான்மையான செயல்கள் எழுதப்படாத சட்டங்களாக தான் பின்பற்றபடுகின்றன. அது போன்ற நேரங்களில் குழப்பமான, சிக்கலான சூழ் நிலைகள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தடைக்கற்களாக மாறுகின்றன.
மாற்றம் தேவை
பிரச்சினைகள் அதிகமாகும் பொழுது சில நேரங்களில் விதிகளும் சட்டங்களும் மாற்றி அமைக்க வேண்டியிருக்கும். நிறுவனங்களின் தொலைநோக்கு திட்ட மிடுதல் பாதிக்கப்படலாம். இது போன்ற சூழ்நிலைகளில் எளிமையான செயல் பாடுகளையும் வழிமுறைகளையும் வகுத்துக்கொள்வது சிறுநிறுவனங் களுக்கு வெற்றியை தேடித்தரும்.அது போன்ற சூழ்நிலைகளில் நிறுவனங்கள் தகுதியான திறமையான தலைவர்களை எதிர்பார்த்து காத்திருக்கும். தகுதியான திறமையான தலைவர்கள் நிறுவன முழுமையையும் இடியாப்ப சிக் கலில் சிக்க விடாமல் எளிதான பயன்பாடு களால் முன்னேற்றத்தை வரையறை செய்து கொண்டு நிறுவனத்தை மேலும் உயர்த்துகிறார்கள்.
எளிமைப்படுத்து
எளிமையான விதிகளை எல்லோராலும் ஏற்படுத்தி எல்லா சூழ்நிலைகளிலும் பயன்படுத்த முடியாது. எளிமையான வழிமுறை களை கண்டறிவது ஒரு கலை, அதைக் காட்டிலும் அவ்வாறு கண்டறிந்த எளிமை யான விதிமுறைகள் நமக்கு எவ்வாறு பயன் தரும் என்பதை அறிந்துக் கொள் வதாகும். இயற்கையான தேர்ந்தெடுத் தல் முறையில் ஒரு பிரச்சினையை தேர்ந்தெடுத்து விஞ்ஞான அறிவை உள்செலுத்தி எளிமையான விதிமுறை களை படிப்படியாக எவ்வாறு பிரச்சினை களை தீர்ப்பது என்று கண்டறிவது விவேகம். அவ்வாறு விதிமுறைகளை வரையறை செய்யும் பொழுது ஏதே னும் எதிர்ப்புகளோ குறைபாடுகளோ தவிர்க்க முடியாத காரணங்களால் தவறுகளோ ஏற்படலாம், அவ்வாறு ஏற்படுவதை தடுத்து தடைகளை தாண்டி வெற்றி பெறுவதற்கு எளிதான விதிமுறைகள் பெரிதும் உதவும். மேலே கூறிய வட்டமான தொடர் நிகழ்வுகளை ஒவ்வொரு பிரச்சினைக்கும் இணைத்து பார்த்தால் விடையும் எளிது, வெற்றியும் உறுதி.
பயனற்ற செயல்களாக இருந்தால் மறந்து விடுங்கள். ஏனென்றால், போலி யான வழிமுறைகள் தடைகளை தாண்ட உதவாது. குழிகளில் பதுங்க முடியாது. அவ்வாறு எளிதான விதிமுறைகளை எவ்வாறு வடிவமைப்பது, எவ்வாறு மேம்படுத்துவது, மாற்றங்களை ஏற்படுத்துவது, தடைகளை தகர்த்து புதியதோர் வழிசெய்தல் மற்றும் எளிதான வழிகளுக்கு முட்டுக்கட்டைகளை தகர்த்து எரிதல் போன்றவைகளை பற்றி பக்கம் 173 முதல் 227 வரை ஆசிரியர் கள் வெகு தெளிவாக, அழகாக எளிமை யான முறையில் எழுதியிருக்கிறார்கள்.
எண்ணற்ற வாய்ப்புகளை ஒருவர் எதிர்க்கொள்ளும் பொழுது குழப்பமான, கடினமான வழிமுறைகளை பின்பற்றி னால் வெற்றி எட்டாக்கனியாகும். மாறாக, முழுமையான பலமான வழிகாட்டுதலின் படி எளிமையான விதிமுறைகளை வகுத்துக் கொண்டு பிரச்சினைகளை எதிர் நோக்குபவர்கள் வெற்றியை தவிர வேறு எதையையும் அடைய முடியாது. எட்டாக்கனிக்கு உத்திகளை உருவாக்கி தோல்வியில் துவளுவதா? எட்டும் கனியை பறித்து சுவைத்து மகிழ்வதா? இப்பொழுதும் எளிதான வழிமுறைகள் உங்கள் வசமே உள்ளன. மாறுங்கள். மாற்றுங்கள் பயன்படுத்துங்கள்.
rvenkatapathy@rediffmail.com