விஜய் மல்லையா வுக்கு மீண்டும் பிணையில் வெளி வர முடியாத பிடி ஆணையை டெல்லி நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அந்நிய செலாவணி கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக விஜய் மல்லையா மீது இந்த பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 4-ம் தேதி விஜய் மல்லையா மீது பிணையில் வெளிவர முடியாத பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த பிடி ஆணை மீது இன்னும் நடவடிக்கை எடுக்காததை அடுத்து பிடி ஆணை நகலை அமலாக்கத்துறையினர் டெல்லி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அதன்பிறகு தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் மீண்டும் பிணை யில் வெளிவரமுடியாத பிடி ஆணையை பிறப்பித்து உத்தரவிட் டார். தற்போது பிறப்பிக்கப் பட்டுள்ள பிடி ஆணைக்கு கால வரையறை கிடையாது. அடுத்த விசாரணை நவம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு மாதங்களுக்குள் இந்த வழக்கின் மீதான நடவடிக்கை களை சமர்ப்பிக்குமாறு அமலாக் கத்துறையினரை டெல்லி நீதிமன் றம் கேட்டுக் கொண்டுள்ளது.
அமலாக்கத்துறை தகவலின் படி, 1995-ம் ஆண்டு விஜய் மல் லையாவுக்கு நான்கு முறை சம்மன் அனுப்பப்பட்டது. பெனட்டன் பார் முலா மற்றும் கிங்பிஷர் நிறுவனத் திற்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் இந்த கேள்விகளுக்கு மல்லையா பதிலளிக்கவில்லை.
பின்பு மல்லையா அமலாக்கத் துறை முன்பு ஆஜராகாததால் அந்நிய செலாவணி விதிமுறை களை மீறிய குற்றத்திற்காக நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.