வணிகம்

தி இந்து ‘வணிக வீதி நடத்தும் ‘ஏற்றம் தரும் முதலீடு’: முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

செய்திப்பிரிவு

நிதி இலக்குகளை அடைவதற்கு வழிகாட்டுவதற்கான முதலீட் டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தி இந்து ‘வணிக வீதி' சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளது. ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.

சென்னை தி.நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில் வரும் ஞாயிறு (ஏப்ரல் 9) அன்று இந்த நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.

ஏன் சேமிக்க வேண்டும், சேமிப்புக்கும் முதலீட்டுக்குமான வித்தியாசம் என்ன, எது முதலீடு, முதலீடு செய்வதற்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து முதலீட்டு ஆலோசகர் கே.புகழேந்தி பேச இருக்கிறார். அதேபோல எவ்வாறு பிரித்து முதலீடு செய்வது, ஒவ் வொரு முதலீடுகளிலும் இருக்கும் ரிஸ்க்குகள் குறித்து ஃபண்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிறுவனர் காந்த் மீனாட்சி பேச இருக்கிறார்.

இலவசமாக நடக்கும் இந்த நிகழ்ச் சியில் கலந்து கொள்ள முன்பதிவு செய்ய வேண்டும். இதற்கு YTMCH பெயர் வயது ஊர் ஆகியவற்றை டைப் செய்து 8082807690 என்கிற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பினால் இருக்கை முன்பதிவு செய்யப்படும்.

SCROLL FOR NEXT