வணிகம்

அமேசான், பியூச்சர் குழுமம் ஒப்பந்தம்

பிடிஐ

பிக் பஜார் சங்கிலித் தொடர் விற்பனையகங்களை நடத்தும் பியூச்சர் குழுமம் ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

ஆன்லைன் வர்த்தகத்தை ஆரம்பம் முதல் கடுமையாக விமர்சித்து வந்த பியூச்சர் குழுமத்தின் தலைவர் கிஷோர் பியானி தற்போது தனது தயாரிப்புகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய அமேசானுடன் கைகோர்த்துள்ளது குறிப்பிடத் தக்கது. ஆன்லைன் வர்த்தக நிறுவ னங்கள் விற்பனை சந்தையை சிதைத்து வருவதாகவும், உற்பத்தி விலைக்கும் குறைவாக ஆன்லைன் நிறுவனங்கள் விற்பனை செய்வதாகக் குறிப்பிட் டிருந்த பியானி, இது சில்லறை வணிகத்தை வெகுவாக பாதிக்கும் என குறிப்பிட்டிருந்தார்.

சமீபத்தில் இந்தியா வந்திருந்த அமெரிக்க தொழிலதிபர் ஜெஃப் பிஜோஸ், பியூச்சர் குழுமத் தலைவர் கிஷோர் பியானியைச் சந்தித்து பேச்சு நடத்தியது குறிப்பிடத்தக்கது. முதல் கட்டமாக பியூச்சர் குழுமத்தின் ஃபேஷன் பொருள்களை அமேசான் நிறுவனம் விற்பனை செய்யும். பின்னர் படிப்படியாக வேறு பொருள்களுக்கு இது விரிவுபடுத்தப்படும்.

லீ கூப்பர், கான்வர்ஸ், இன்டிகோ நேஷன், ஸ்கல்லர்ஸ், ஜெலஸ் 21 உள்ளிட்ட 40 பிராண்டுகள் அமேசான் டாட் இன் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. பாரம்பரிய முறையிலான வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த பியூச்சர் குழுமம் இப்போது ஆன்லைன் வர்த்தக நிறுவ னத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.

கடந்த மாதம் டாடா நிறுவனத்தின் அங்கமான க்ரோமா தனது தயாரிப்புகளை விற்பனை செய்ய ஸ்நாப்டீல் நிறுவனத் துடன் ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத் தக்கது. பிக் பஜார் தவிர இ-ஜோன், பிராண்ட் ஃபாக்டரி, ஹோம் டவுன் ஆகிய நிறுவனங்களையும் பியூச்சர் குழுமம் நடத்தி வருகிறது.

வாடிக்கையாளர்களை மைய மாகக் கொண்டு செயல்படும் அமேசானுடன் ஒப்பந்தம் செய் துள்ளதன் மூலம் அவர்களது வலு மேலும் அதிகரிக்கும், முதலீடு மற்றும் புதிய உத்திகள் ஆகியவற்றுக்கு இந்த கூட்டு வழிவகுக்கும் என்று கிஷோர் பியானி குறிப்பிட்டார். இரு நிறுவனங்களின் தனித் தன்மையான வலிமையைப் பயன்படுத்தி இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என நம்புவதாக அமேசான் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் அமித் அகர்வால் தெரிவித்தார்.

பியூச்சர் குழும நிறுவனங்கள் சில்லறை வணிக த்தில் 98 நகரங்களில் செயல்பட்டு வருகிறது. கிராமப் பகுதிகளில் 40 இடங்களில் இந்நிறுவனம் செயல்படுகிறது. அமேசான் நிறுவனம் கடந்த ஆண்டுதான் ஆன்லைன் வர்த்தகத்தைத் தொடங்கியது.

SCROLL FOR NEXT