வணிகம்

சுப்ரதோ பக்‌ஷி - இவரைத் தெரியுமா?

செய்திப்பிரிவு

#தொழில்முனைவோர்கள் பெரும்பாலும் என்ஜீனியரிங் அல்லது எம்.பி.ஏ, இல்லை இரண்டுமே படித்தவர்களாகதான் இருப்பார்கள். ஆனால் சுப்ரதோ இது இரண்டையும் படித்தவர் அல்ல. ஒடிசாவில் உள்ள உத்கல் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் படித்தவர்.

#தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து 1999-ம் ஆண்டு மைண்ட் ட்ரீ நிறுவனத்தை ஆரம்பித்தார். 90களின் இறுதியில் பல ஐ.டி. நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அதில் தாக்குபிடித்த சில நிறுவனங்களுள் மைண்ட் ட்ரீயும் ஒன்று.

#இப்போது இந்த நிறுவனத்தின் தலைவராக இருக்கும் சுப்ரதோ, நிறுவனத்துக்கு அடுத்த கட்ட தலைவர்களை உருவாக்கும் பணியில் இருக்கிறார்.

#High Performance Entrepreneur, The Professional, Go Kiss The World உள்ளிட்ட புத்தகங்களை எழுதி இருக்கிறார்கள். சமீபத்தில் The Elephant Catcher என்ற புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்.

#இவரது புத்தகங்கள் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி, மாண்டரின் மற்றும் கொரிய மொழிகளில் மொழி பெயர்க்கபட்டிருக்கின்றன.

#மைண்ட் ட்ரீ நிறுவனத்தை ஆரம்பிக்கும் முன்பு விப்ரோ நிறுவனத்தில் 18 ஆண்டுகள் வேலை பார்த்தார். அங்கிருந்து வெளியேறும் போது, ஆய்வு மற்றும் மேம்பாட்டு பிரிவின் தலைவராக இருந்தார்.

SCROLL FOR NEXT