ரொக்க பரிவர்த்தனையைக் குறைக்கும் நோக்கிலும், கறுப்புப் பண புழக்கத்தைத் தடுக்கும் நோக்கிலும் தனி நபர் ரொக்கமாக பரிவர்த்தனை செய்வதற்கான உச்ச வரம்பு ரூ. 2 லட்சமாக நிர்ணயிக்க அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான விதிகள் நிதி மசோதாவில் தாக்கல் செய்யப் பட்டுள்ளன.
மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் ரொக்க பரிவர்த் தனைக்கான உச்ச வரம்பு ரூ.3 லட்சம் என அறிவிக்கப்பட்டிருந் தது. ஆனால் முன்னெப்போதும் இல்லாத விதமாக இதில் திருத் தம் செய்து ரூ. 2 லட்சம் என நிர்ணயித்துள்ளது.
மக்களவையில் தாக்கல் செய் யப்பட்ட நிதி மசோதாவுக்கு திரிணமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி (ஆர்எஸ்பி) உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசின் இந்த நடவடிக்கையை ``பின் வாசல் வழியாக நுழையும் முயற்சி,’’ என்று விமர்சித்தனர்.
நிறுவனங்கள் சட்டம், ஊழியர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்), கடத்தல் மற்றும் அந்நிய செலா வணி சட்டம், டிராய் சட்டம், தக வல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய சட்டங்களும் தாக்கல் செய்யப்பட் டன. தீர்ப்பாயங்கள் சிறப்பாக செயல்படவும், சிறிய நிறுவனங் களை இணைப்பது உள்ளிட்டவற் றுக்கான மசோதாக்கள் கொண்டு வரப்பட்டன. இதன் மூலம் விதிகள் 40-லிருந்து 12 ஆகக் குறைந் துள்ளன.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பை மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தள்ளுபடி செய்து, இந்த மசோதாக்களை நிறைவேற விதிமுறைகளில் இடமுள்ளது என்றார். சூழ் நிலைக்குத் தகுந்தவாறு நிதி மசோதா பிரிவில் இத்தகைய பண மசோதாவும் இடம்பெற்றுவிடும். இதனாலேயே பண மசோதாவை பல சந்தர்ப்பங்களில் நிதி மசோதா வாக கொண்டு வர வேண்டியுள்ளது என்று அவர் விளக்கம் அளித்தார்.
நிதி மசோதாவில் ரொக்க பரிவர்த்தனை வரம்பு ரூ. 2 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டது. முன்னதாக கடந்த பிப்ரவரி 1-ம் தேதி ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் ஏப்ரல் 1 முதல் ரொக்க பரிவர்த்தனை வரம்பு ரூ. 3 லட்சமாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.
விதிகளை மீறுவோர் எந்த அளவுக்கு ரொக்க பரிவர்த்தனை செய்தார்களோ அதே அளவு தொகை அபராதமாக விதிக்கவும் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ள தாக மசோதா தாக்கல் செய்யப்பட்ட பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் நிதிச் செயலர் ஹஷ்முக் ஆதியா குறிப்பிட்டுள்ளார்.
இந்த மசோதாக்களை தாக்கல் செய்தபோது மக்களவையின் முதலாவது தலைவர் ஜி.வி. மாவ்லோங்கரைக் குறிப்பிட்டு ஜேட்லி பேசினார். வரி விதிப்பு முறையை கைவிடுவது மற்றும் அபராதம் விதிப்பது உள்ளிட்ட அனைத்துமே பண மசோதாவாக அறிமுகம் செய்ய வழி வகை உள்ளது என்று ஜேட்லி குறிப்பிட்டார்.