பிரதமர் நரேந்திர மோடியை விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அஸிம் பிரேம்ஜி நேற்று சந்தித்தார். இந்த தகவலை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆனால் எதற்காக பிரதமரை பிரேம்ஜி சந்தித்தார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. ’டிஜிட்டல் இந்தியா’ மற்றும் ’மேக் இன் இந்தியா’ ஆகிய திட்டங்கள் குறித்து மோடி வியாபார நிறுவனங்களின் தலைவர்களை தொடர்ச்சியாக சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்பு சாப்ட் பேங்க் தலைவர் மசாயோஷி சோன் பிரதமரை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.