வணிகம்

எல் அண்ட் டி இன்போடெக் ஐபிஓ இன்று தொடக்கம்

செய்திப்பிரிவு

எல் அண்ட் டி இன்போடெக் நிறுவ னத்தின் பொதுப்பங்கு வெளியீடு இன்று தொடங்குகிறது. வரும் 13-ம் தேதி வரை ஐபிஓவுக்கு விண்ணப் பிக்கலாம். இந்த ஐபிஓ மூலம் ரூ.1,243 கோடி திரட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான விலை பட்டையாக ரூ.705-ரூ.710 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் நிறுவன முதலீட் டாளர்களிடம் ரூ.370 கோடியை கடந்த வெள்ளிக்கிழமை திரட்டியது. ஒரு பங்கின் விலை ரூ.710 என்ற அடிப்படையில் எல் அண்ட் டி இன்போடெக் நிதி திரட்டியது. இந்தி யாவின் ஆறாவது மிகப்பெரிய ஐடி நிறுவனம் இதுவாகும்.

SCROLL FOR NEXT