கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உட்பட நான்கு அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு அமெரிக்காவின் மிக உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளில் இருந்து அமெ ரிக்காவில் குடிபெயர்ந்து பொருளா தார வாய்ப்பு, கல்வி, அரசியல் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற் றில் சிறந்து விளங்குபவர்களுக்கு ‘சிறந்த குடிபெயர்ந்தவர்கள்: அமெரிக்காவின் பெருமை' என்ற விருது, ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதினை கார்னெகி நிறுவனம் வழங்கி வருகிறது.
மொத்தம் 42 பேர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை, மெக்கென்சி நிறுவனத்தின் தலைவர் விக்ரம் மல்கோத்ரா, எழுத்தாளர் பாரதி முகர்ஜி, பிபிஎஸ் நியூஸ் ஹவர் தொலைக் காட்சியின் நெறியாளர் மற்றும் மூத்த பத்திரிகையாளருமான ஹரி னிவாசன் ஆகிய நான்கு இந்தியர்களுக்கு வழங்கப்பட் டுள்ளது.
இந்த விருது குறித்து மெக்கென்சி நிறுவனத்தின் தலைவர் விக்ரம் மல்ஹோத்ரா கூறுகையில், மிகப் பெரிய வாய்ப்புகளை கொண்டிருக்கும் நாடு அமெரிக்கா. வெளிநாட்டவர்களை ஈர்ப்பதிலும் பல்வேறு ஆற்றல்களை அங்கீரிப் பதிலும் முக்கியமான நாடாக அமெரிக்கா திகழ்கிறது என்று தெரிவித்தார்.