ஐடிசி நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக (சிஓஓ) சஞ்சீவ் பூரி (53) நியமனம் செய்யப் பட்டிருக்கிறார்.
இதன் மூலம் ஒய்.சி. தேவேஷ்வருக்கு பிறகு ஐடிசியின் பொறுப்புக்கு சஞ்சீவ் பூரி வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமடைந்துள்ளன. அடுத்த வருடம் பிப்ரவரியில் தேவேஷ்வர் ஓய்வு பெற இருக்கிறார்.
நிறுவனத்தின் இயக்குநர் குழு நேற்று கூடி சஞ்சீவ் பூரி நியமனத் துக்கு ஒப்புதல் வழங்கியது. 1986-ம் ஆண்டு ஐடிசி நிறுவனத்தில் சேர்ந்த இவர் தற்போது முழு நேர இயக்குநராகவும் உள்ளார்.