பணமதிப்பு நீக்கத்தின் காரணமாக கடந்த டிசம்பர் மாதத்தில் வாகனங்களின் விற்பனை கடுமையாக சரிந்துள்ளன. குறிப்பாக 16 ஆண்டுகளில் இல்லாத வகையில் சரிவைக் கண்டுள்ளதாக இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் கூறியுள்ளது. டிசம்பர் மாதத்தில் ஒட்டுமொத்த வாகன விற்பனை 18.66 சதவீதம் சரிந்துள்ளது.
நுகர்வோரிடையே எழுந்த அச்சத்தின் காரணமாக டிசம்பர் மாதத்தில் ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், கார்கள் என அனைத்து விற்பனையும் சரிந்தன. மொத்தம் 12,21,929 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. 2015ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 15,02,314 வாகனங்கள் விற்பனை யாகியுள்ளன என்று கூறப்பட்டுள் ளது. 2000-வது ஆண்டின் டிசம்பர் மாதத்துக்கு பிறகு இது மிகப் பெரிய சரிவு என்று இந்த அமைப்பின் இயக்குநர் விஷ்ணு மாத்தூர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சரிவு தற்காலிகமானது தான் என்றாலும், எதிர்வரும் பொது பட்ஜெட் அடிப்படையில் வாகன விற்பனை இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.