ஜூலை 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் உடனடியாக ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும், குறிப்பாக வரி, அக்கவுண்டிங், தகவல் பகுப்பாய்வு ஆகிய பிரிவுகளில் இந்த வேலை வாய்ப்புகள் உருவாகும் என வரித்துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
இந்திய பணியாளர் கூட்டமைப் பின் தலைவர் ரிதுபர்னா சக்ர வர்த்தி கூறியதாவது: ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு, சரக்குகளை வாங்குவது மற்றும் விநியோகம் செய்வது மிக எளிதாக இருக் கும். நிறுவனங்களின் லாப வரம்பு உயரும். ஜிஎஸ்டியால் வெளிப் படைத்தன்மை இருப்பதால் முறைப் படுத்தப்படாத நிறுவனங்களால் போட்டியிட முடியாத சூழல் இருக் கும். நாட்டில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களாக மாறும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் முறைப்படுத்தப்பட்ட துறையில் ஆண்டுக்கு 10 முதல் 13 சதவீதம் வரை வேலை வாய்ப்பு வளர்ச்சி இருக்கும்.
குளோபல்ஹன்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுனில் கோயல் கூறும்போது, ``ஜிஎஸ்டி அமல்படுத் தப்பட்ட முதல் காலாண்டில் மட் டும் ஒரு லட்சம் வேலை வாய்ப் புகள் உருவாகும். இது தவிர 50,000 முதல் 60,000 நபர்கள் ஜிஎஸ்டி செயல்படுத்துவதற்காக தேவைப்படுவார்கள்’’ என்று கூறி னார். “ஜிஎஸ்டி காரணமாக தொழில் புரிவதற்கு எளிதான சூழல் உரு வாக்கப்படும். அதனால் வெளி நாட்டு முதலீடுகள் உயரும். இதன் காரணமாகவும் வேலை வாய்ப்பு உருவாகும்” என மான்ஸ்டெர் நிறுவனத்தின் சஞ்சய் மோடி கூறினார்.