ஏர்டெல் ஜீரோ மற்றும் ஃபிரீ பேஸிக்ஸ் திட்டங்களை எதிர்ப்பதாக ஐடி தொழில்நுட் பத்துறையின் தேசிய அமைப்பான நாஸ்காம் தெரிவித்துள்ளது. இந்த திட்டங்கள் இணைய சம வாய்ப்பு வழங்கும் பல்வேறு விதமான இணையதள இணைப்புகள், பல்வேறு விதமான சேவைகள் கொள்கைக்கு எதிராக இருப்பதாக கருதுவதாகவும் கூறியுள்ளது.
இதுதொடர்பாக நேற்று நாஸ் காம் தலைவர் ஆர்.சந்திரசேகர் பேசியபோது தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள், அவர்கள் வழங்கும் சேவையில் தேர்தெடுக் கும் வாய்ப்பைக் குறைக்கும் வகையில் உள்ளடக்கம், விலைக்கு ஏற்ப சேவை, அல்லது வேகத்தை கொடுக்கும் திட்டங்களை எதிர்ப் பதாக கூறினார்.
குறிப்பாக ஏர்டெல் ஜீரோ மற்றும் ஃபிரீ பேசிக்ஸ் திட்டத்தில் மறைமுகமாகவும் இணைய தளங்கள் மற்றும் இணைய இணைப்பு வரையறைக்கு உட்பட்ட தாகவே இருக்கும். தொலை தொடர்பு நிறுவனங்களின் தேர்ந் தெடுக்கும் அல்லது தங்கள் கூட்டு வைத்துள்ள சேவைகளை மட்டுமே வழங்க முன்வரும். இது இணைய சமவாய்ப்புக்கு எதிரானதாக இருக் கிறது என்று குறிப்பிட்டார்.
இணைய சம வாய்ப்பு குறித்த விவகாரத்தில் பொதுமக்கள் தங்களின் கருத்துகளை ஜனவரி 07 ஆம் தேதி வரை தெரிவிக்கலாம் என் தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) அறிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.