வணிகம்

பெங்களூரு கலவரம்: அமேசான், பிளிப்கார்ட், ஐடி நிறுவனங்கள் பாதிப்பு

பிடிஐ

காவிரியில் தமிழகத்துக்கு தண் ணீர் திறந்து விடக் கோரி உச்ச நீதிமன்றம் விதித்த தீர்ப்பால் கர்நாடக மாநிலத்தின் பல பகுதி களில் கலவரம் வெடித்துள்ளது.

இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்றழைக்கப்படும் பெங்களூருவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் செயல்பாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் பொருள்களை டெலிவரி செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குறிப்பாக இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்டவை தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்தே பணி புரியுமாறு தெரிவித்துவிட்டது. திங்கள்கிழமை பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை முற்பகலி லேயே அனுப்பிவிட்டது. செவ்வாய்க்கிழமை வீட்டிலிருந்து பணிபுரியுமாறு இ-மெயில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கலவரத்தால் தாங்கள் பொருள்களை டெலிவரி செய்வது பாதிக்கப்பட்டுள்ளதாக பிளிப்கார்ட் நிறுவன உயர் அதிகாரி நீரஜ் அகர்வால் தெரிவித்துள்ளார். மக்கள் பெருமளவு பீதியில் உள்ளதால் அவர்களால் முழுமையான அளவுக்கு பணியாற்ற முடியவில்லை. இதனால் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக பல நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மெபாசிஸ், ஓலா, பிளிப் கார்ட், சாம்சங், ஆரக்கிள் உள்ளிட்ட நிறுவனங்களின் அலு வலகங்களும் பெங்களூருவில் அமைந்துள்ளன. பெங்களூருவில் ஏற்பட்ட வன்முறையால் ஏற்பட்ட பொருள் சேத மதிப்பு ரூ. 25 ஆயிரம் கோடி இருக்கும் என அசோசேம் மதிப்பிட்டுள்ளது.

கடந்த 2-ம் தேதி வர்த்தகர்கள் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தால் பணி கள் பாதிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து தற்போது கலவரத் தால் பணிகள் பாதிக்கப்பட் டுள்ளன. இந்த மாதத்தில் நான்கு நாள்கள் இவ்விதம் பாதிப்புக்குள்ளானதாக தகவல் கள் தெரிவிக்கினறன.

SCROLL FOR NEXT