வணிகம்

அனைவருக்கும் காப்பீடு சாத்தியமாகும்: அருண் ஜேட்லி பேச்சு

பிடிஐ

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியடையும்போது அனை வருக்கும் காப்பீடு வசதி கிடைக்கும். சில ஆண்டுகளில் முழுமையான காப்பீடு பெற்ற சமுதாயமாக இந்தியா உருவெடுக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி குறிப்பிட்டார்.

ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) 60-வது ஆண்டு கொண் டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர் மேலும் கூறியது:

வேகமான பொருளாதார வளர்ச்சியை இந்தியா எட்டி வருகிறது. இதனால் அனைவருக் கும் காப்பீடு சாத்தியமாகும். அடுத்த சில ஆண்டுகளில் முழுமையான காப்பீடு பெற்ற சமுதாயமாக இந்தியா உருமாறும். முழுமையான காப்பீடு அளிப்பதில் எல்ஐசி முக்கிய பங்காற்ற முடியும்.

7-வது ஊதியக் குழு பரிந்துரையில் சமூக பாதுகாப்புக் கான ஒதுக்கீட்டை தொழிற்சங்கங் கள் எதிர்ப்பதை எவ்விதம் ஏற்க முடியும் என்று குறிப்பிட்ட அவர் தொழிற்சங்கங்கள் வெள்ளிக் கிழமை அழைப்பு விடுத்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு பதிலளிக்கும் வகையில் இக்கருத்தைத் தெரிவித்தார்.

ஆனால் சமூக பாதுகாப்பின் அவசியத்தை அனைவரும் உணர்வார்கள். முழுமையான காப்பீடு பெற்ற சமுதாயமாக உருவாவது நிச்சயம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

காப்பீட்டுத் துறையில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டு 16 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இருப்பினும் சந்தையில் 70 சதவீதத்தை பிடித்து தொடர்ந்து முதலிடத்தில் எல்ஐசி உள்ளது மிகவும் மகிழ்ச்சியான விஷய மாகும்.

பொதுவாக தனியார் துறையி னரின் போட்டியைச் சமாளிக்க முடியாமல் பொதுத்துறை நிறுவ னங்கள் வீழ்ந்துவிடும். இதற்குக் காரணம் தனியார் நிறுவனங்களில் அதிகாரிகளின் குறுக்கீடு இருக் காது. ஆனால் எல்ஐசி இந்த இடர்பாட்டையும் தாண்டி முதலிடத் தில் உள்ளது சிறப்பான விஷயம்.

முதலிடத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள புதிய புதிய காப்பீட்டுத் திட்டங்களை, மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை எல்ஐசி கொண்டு வர வேண்டும். இதன் மூலம்தான் 1956-ம் ஆண்டு எல்ஐசி எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அதை எட்ட முடியும்.

இந்தியாவின் வளர்ச்சியில் எல்ஐசியின் பங்களிப்பு அபரிமிதமானது. இந்நிறுவனம் முக்கியமான துறைகளில் ரூ. 4 லட்சம் கோடியை முதலீடு செய்துள்ளது என்றார். பங்குச் சந்தையில் எல்ஐசி பட்டியலிடப்பட்டால் அது மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாகத் திகழும் என்றார்.

நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு ரூ. 1 லட்சம் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அளிப்பது குறித்து சுகாதார அமைச்சகம் பரிசீலித்து வருவதாக ஜேட்லி குறிப்பிட்டார். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு ஏழை மக்களாக உள்ளதால் அவர்களுக்கு மருத்துவக் காப்பீடு அளிக்க அரசு திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.

இந்த விழாவில் ரூ.1,803 கோடி உபரித் தொகைக்கான காசோலையை, தலைவர் பதவியி லிருந்து ஓய்வு பெறும் எஸ்.கே.ராய் மத்திய அரசுக்கு வழங்கினார். கடந்த ஆண்டு ரூ. 1,803 கோடி உபரித் தொகை இவ்விதம் அளிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

வைர விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து காப்பீடுதாரர்களுக்கும் ஒருமுறை வழங்கும் லாபத்தில் பங்குத் தொகை அளிக்கப்படும் என எஸ்.கே.ராய் தெரிவித்தார்.

2014-15-ம் நிதி ஆண்டில் எல்ஐசி ரூ. 34,283 கோடியை வழக்கமான ஆண்டு போனசாக காப்பீடு தாரர்களுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT