பேமெண்ட் வங்கி சேவை செயல்பாடுகளை மே மாதம் 23-ம் தேதி முதல் பேடிஎம் நிறுவனம் தொடங்க இருக்கிறது. பேமெண்ட் வங்கி சேவை தொடங்குவதற்கான இறுதி ஒப்புதலை ரிசர்வ் வங்கி அளித்ததை அடுத்து பேமெண்ட் வங்கி செயல்பாடுகளை பேடிஎம் நிறுவனம் தொடங்க இருக்கிறது.
பேடிஎம் நிறுவனம் தனது வாலட் தொழிலை புதிய நிறுவனமான பேடிஎம் பேமெண்ட் வங்கி நிறுவனத்துக்கு மாற்ற இருக்கிறது. தற்போது நிலவரப்படி பேடிஎம் வாலட்டை கிட்டத்தட்ட 21.8 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்து கின்றனர். பேமெண்ட் வங்கி உரிமத்தின் கீழ் வாலட் தொழிலை பேமெண்ட் வங்கி நிறுவனத்துக்கு மாற்றப்படுவதாக பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா தெரிவித்தார். மே மாதம் 23-ம் தேதிக்குப் பிறகு இந்த மாற்றம் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஒருவேளை இந்த மாற்றம் வாடிக்கையாளர்களுக்கு பிடிக்கவில்லையென்றால் இது குறித்து கருத்து தெரிவிக்கலாம். மேலும் தங்களது கருத்தை அல்லது விருப்பத்தை மே 23-ம் தேதிக்கு முன்னரே தெரிவிக்குமாறு பேடிஎம் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
2015-ம் ஆண்டு பேடிஎம் நிறுவ னத்துக்கு பேமெண்ட் வங்கி சேவையை தொடங்குவதற்கான முதற்கட்ட ஒப்புதல் அளிக்கப் பட்டது. பேடிஎம் மட்டுமல்லாமல் மேலும் 10 நிறுவனங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதை யடுத்து பேடிஎம் நிறுவனம் பேமெண்ட் வங்கி ஆரம்பிப்பதற் கான செயல்பாடுகளை தொடங் கியது. அனைவருக்கும் வங்கிச் சேவை திட்டத்தை மேம்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி பேமெண்ட் வங்கி மற்றும் சிறிய நிதி வங்கி சேவையை வழங்க பல்வேறு நிறுவ னங்களுக்கு அனுமதி வழங்கப் பட்டது. 21 நிறுவனங்களுக்கு இதுவரை அனுமதி வழங்கப் பட்டுள்ளது.