வணிகம்

பார்எவர் 21-ஐ வாங்கியது ஆதித்யா பிர்லா

செய்திப்பிரிவு

ஆதித்யா பிர்லா பேஷன் மற்றும் ரீடெய்ல் நிறுவனம் ஆடை வடிவமைப்பில் முன்னணி பிராண்டான பார்எவர் 21யை கையகப்படுத்தியுள்ளது. ரூ.175.22 கோடி ரூபாய்க்கு இந்த கையகப்படுத்துதல் நடந்துள்ளது.

பார்எவர்21 பிராண்டின் இந்திய பிரான்சைசியாக டயானா ரீடெய்ல் நிறுவனம் உள்ளது.

டாயனா ரீடெய்ல் நிறுவனத்திடமிருந்து பார்எவர் 21 பிராண்டை கையகப்படுத்தியுள்ளோம். ஜூலை 1-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும். மேலும் கையகப்படுத்துதல் பற்றிய விவரங்களை கூற இயலாது என்று ஆதித்யா பிர்லா பேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

          
SCROLL FOR NEXT