உலகத்திலேயே அதிக நிலப் பரப்பு கொண்டுள்ள நாடு ரஷியா. சுமார் ஒரு 1.71 கோடி சதுர கிலோ மீட்டர்கள். இரண்டாம் இடம் பிடிப்பது கனடா . சுமார் ஒரு கோடி கிலோ மீட்டர்கள். கனடாவில் இன்னும் பல பிரம்மாண்டங்களும் உண்டு. ஆன்ட்டேரியோ நகரத்தில் இருக்கும் யோங்கே தெரு (Yonge Street) 2000 கிலோமீட்டர் நீளமானது, உலகிலேயே மிகப் பெரியது. உலகின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சியான நயாகரா இருப்பதும் கனடாவில்தான்.
இன்னொரு அதிசயமும் இங்கே உண்டு. அதுதான், கியூபெக் நகரில், 2001 இல் தொடங்கப்பட்ட de Glace என்னும் ஹோட்டல். 3,000 சதுர மீட்டர் பரப்பும், 44 அறைகளும் கொண்டது. தினசரி வாடகை ஆளுக்கு 199 டாலர். இந்த ஹோட்டலில் இதுவரை பத்து லட்சம் பேருக்கும் அதிகமானோர் வந்து தங்கியிருக்கிறார்கள். இந்த ஹோட்டல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் இறுதிவரை மட்டுமே திறந்திருக்கும். மீதி ஒன்பது மாதங்களில்……. ஹோட் டலை மூடுவார்களா? இல்லை, ஹோட்டலே காணாமல் போய்விடும். இது என்ன மந்திரஜாலம் என்று ஆச்சரியப்படுகிறீர்களா? ஜனவரி முதல் மார்ச் முடிய கனடாவில் கடும் குளிர்காலம். சுமார் 12,400 டன் ஐஸ் கட்டிகளால், இந்த ஹோட்டல் கட்டுகிறார்கள், ஏப்ரல் மாதம் வெயில் வரத் தொடங்கும். ஹோட்டல் உருகிப் போய்விடும். டிசம்பரில் மறுபடி கட்டுவார்கள். ஒவ்வொரு வருடமும் இது தொடர்கதை.
பூகோள அமைப்பு
வட அமெரிக்கக் கண்டத்தில் இருக்கிறது. கிழக்கில் அட்லாண்டிக் பெருங்கடல், மேற்கே பசிபிக் பெருங்கடல், வடக்கே வட துருவம், தெற்கில் அமெரிக்கா. கனடா பத்து மாகாணங்களையும் மூன்று ஆட்சி நிலப்பகுதிகளையும் கொண்ட கூட்டமைப்பு. தலைநகரம், ஒட்டாவா.
மொத்த நிலப்பரப்பு 99,84,670 சதுர கிலோமீட்டர்கள். பெரும்பாலான பகுதி மலைகள், காடுகள், பனி நிறைந்த துருவம். காடுகளின் மரங்கள், தங்கம், வெள்ளி, வைரங்கள், செம்பு, இரும்பு, துத்தநாகம், காரீயம், யுரேனியம், சுண்ணாம்புக் கல் ஆகியவை இயற்கை கொட்டித் தந்திருக்கும் செல் வங்கள்.
சுருக்க வரலாறு
சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்னால், சைபீரியா, ஆசியப் பகுதி களிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள்தான் பழங்குடியினர். 15 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளின் ஆய்வாளர்கள் கனடாவுக்கு வந்தார் கள். ஆனால், இவர்கள் குடியேற்றம் தொடங்கியது நூறு ஆண்டுகளுக்குப் பிறகுதான்.
1603 முதல் பிரெஞ்சுக்காரர்களும், 1610 முதல் பிரிட்டிஷாரும் வந்து தங்க ஆரம்பித்தார்கள். கனடாவுக்குச் சொந்தம் கொண்டாட, இரு நாடுகளுக் குமிடையே அடிக்கடி மோதல்களும், போர்களும் வந்தன. 1763 இல், பிரான்ஸ் ஒட்டுமொத்தக் கனடாவையும் இங்கிலாந்துக்கு விட்டுத் தந்தது.
1775, 1812 ஆகிய இரு ஆண்டுகளிலும், அமெரிக்கா கனடாமீது படையெடுத்தது. ஆனால், தோல்வி கண்டது. இங்கிலாந்தின் ஆதிக்கம் தொடர்ந்தது.
1867ல், இங்கிலாந்து அரசரின் ஆட்சியின்கீழ், மக்களாட்சி மலர்ந்தது. 1982 இல், தனி நாடானது. காமன்வெல்த் அமைப்பின் அங்கத்தினராகத் தொடர்கிறது.
மக்கள் தொகை
மூன்றரைக் கோடி. 41 சதவீதம் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள்: 20 சதவீதம் பிராட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்கள். பிற கிறிஸ்தவர்கள் 6 சதவீதம். இஸ்லாமியர்கள் 3 சதவீதம். இந்திய பாரம்பரியம் கொண்ட இந்துக்களும், சீக்கியர்களும் தலா ஒன்றரை சதவீதம். சுமார் இரண்டு லட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள். காரைக்குடியைப் பூர்வீகமாகக் கொண்ட வள்ளியம்மை அண்மையில் கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது நம்மைப் பெருமைப்படவைக்கும் செய்தி.
ஆங்கிலமும், பிரெஞ்சும் ஆட்சி மொழிகள். கல்வியறிவு குறைவு. 58 சதவீதம்தான்.
ஆட்சிமுறை
இங்கிலாந்து மகாராணி தலைமை வகிக்கும் மன்னராட்சியும், மக்களாட் சியும் சேர்ந்த அற்புதக் கலவை. மகாராணியின் பிரதிநிதியாகக் கவர்னர் ஜெனரல் ஆட்சி. செனட் என்னும் மேல் சபை.
இதன் அங்கத்தினர்கள் நியமிக்கப் படுகிறார்கள். ஹவுஸ் ஆப் காமன்ஸ் (House of Commons) என்னும் கீழ் சபை. இதன் உறுப்பினர்கள் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் வாக்களிப்பின் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறர்கள். பெரும் பான்மை பெறும் கட்சித் தலைவர், கவர்னர் ஜெனரலால் பிரதமராகும்படி அழைக்கப்படுகிறார்.
பொருளாதாரம்
தொழில் நுட்பமும், பொருளாதார வளர்ச்சியும் கொண்ட நாடு. அமெரிக்கா அண்டையில் இருப்பதும், அவர்களோடு கையெழுத்திடப்பட்டிருக்கும் ஒப்பந் தங்களும் இதற்கு முக்கிய காரணம். பொருளாதாரத்தில் சேவைத் துறையின் பங்கு 70 சதவீதம். சங்கிலித் தொடராக இருக்கும் வால்மார்ட் போன்ற சில்லரை வியாபாரக் கடைகள், நிதி நிறுவனங்கள், கட்டுமானம் ஆகிய வை இந்த 70 சதவீதத்தில் இடம் பிடிக்கின்றன. தொழில் துறையின் பங்கு 29 சதவீதம். பெட்ரோலியம், உலோகத் தாதுப் பொருட்கள், யுரேனியம், மரம், கெமிக்கல்கள், போக்குவரத்து வாகனங்கள், விமானங்கள் தயாரிப்பு போன்றவை முக்கிய தொழில்கள். விவசாயம் பொருளாதாரத்தில் ஒரு சதவீதப் பங்கு மட்டுமே வகிக்கிறது.
நாணயம்
கனடியன் டாலர். சுமார் 47 ரூபாய் 50 காசு.
இந்தியாவோடு வியாபாரம்
கனடாவுக்கு நமது ஏற்றுமதி ரூ. 13,431 கோடி. இவற்றுள் முக்கியமானவை இரும்பு உருக்குப் பொருட்கள், கெமிக்கல்கள், மருந்துகள், ஆயத்த ஆடைகள், ரப்பர் ஆகியவை. நம் இறக்குமதி ரூ. 22,966 கோடிகள். காய்கறிகள், பெட்ரோலியம், உலோகத் தாதுக்கள், உரங்கள், காகிதம், மரக்கூழ் போன்றவை இடம் பிடிக்கின்றன.
விசிட்
நவம்பர் முதல் ஏப்ரல் வரை கடும் குளிர். ஜூன் முதல் ஆகஸ்ட் வரை கோடை காலம். தமிழ்நாட்டுக்காரர்களுக்கு மிகச் சிறந்தது. ஆனால், கோடையில் சுற்றுலாப் பயணிகள் கூட்டமும் அதிக மாக இருக்கும்.
பிசினஸ் டிப்ஸ்
மக்கள் தொகையில் 16 சதவீதம் இருக்கும் பிரெஞ்சுக்காரர்கள் பெரும் பாலும் நேரம் தவறாமையைக் கடைப் பிடிப்பதில்லை. பிறர் நேரத்துக்கு வருவார்கள். இந்தப் பின்புலங்களை ஆராய்ச்சி செய்யாமல் நாம் சந்திப் புக்குக் குறிப்பிட்ட நேரத்தில் போய் விடுவது நல்லது. விசிட்டிங் கார்டுகள் அவசியம். இவை ஒரு பக்கம் ஆங்கிலத்திலும், மறுபக்கம் பிரெஞ்சு மொழியிலும் இருப்பது நல்லது.
கை குலுக்கல் அழுத்தமாக இருக்கும். நேர்மையானவர்கள். நம்மிடமும் நேர்மையை எதிர்பார்ப்பார்கள். நம் கண்களைப் பார்த்தபடி பேசுவார்கள்.
மிக நெருங்கி நின்றுகொண்டு பேசுவது பிடிக்காதவர்கள். சாதார ணமாக, இரண்டடி இடைவெளி வைத்துக்கொண்டு பேசுவது வழக்கம். நாமும் இதைப் பின்பற்றவேண்டும்.
தூரத்தில் இருக்கும் யாரையாவது அழைக்கவேண்டுமானால், ஒற்றை விரலால் சுட்டிக்காட்டிக் கூப்பிடக் கூடாது. ஐந்து விரல்களையும் நிமிர்த்தி, உள்ளங்கையைத் தூக்கி அழைக்க வேண்டும்.
உடைகள்
இங்கிலாந்திலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் சூட் அணிவதுண்டு. பிறர் அமெரிக்கப் பாதிப்பால், காஷுவல் உடைகள் அணிவார்கள். நாம் பிசினஸ் மீட்டிங்களுக்கு பாண்ட், முழுக்கை சட்டை அணிவது நல்லது.
பரிசுகள் தருதல்
விலை உயர்ந்த பரிசுகள் தரக்கூடாது. கனடியர்கள் ஆடம்பரத்தையும், பந்தா வையும் விரும்புவதில்லை. வெளிநாட் டினர் வரும்போது, அவர்கள் நாட்டுப் பொருட்களைப் பெற விரும்புவார்கள்.
slvmoorthy@gmail.com