வணிகம்

நெட்வொர்க் 18 மீடியா நிகர நஷ்டம் ரூ.36.46 கோடி

பிடிஐ

நெட்வொர்க் 18 மீடியா மற்றும் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் 36.46 கோடி ரூபாய் நிகர நஷ்டமடைந் திருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்திலும் 39.83 கோடி ரூபாய் நஷ்டமடைந்தது குறிப் பிடத்தக்கது.

செப்டம்பர் காலாண்டில் நிறுவ னத்தின் மொத்த வருமானம் 744.83 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த வருடம் இதே காலத்தில் மொத்த வருமானம் 669.84 கோடி ரூபாயாக இருந்தது. இருந்தாலும் நிறுவனத்தின் முடிவுகளை கடந்த வருடத்துடன் ஒப்பிட முடியாது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி முதல் ஈநாடு தொலைக்காட்சி துணை நிறுவனமாக இணைந்தி ருக்கிறது. இது மட்டுமல்லாமல் இன்னும் சில நிறுவனங்களும் இணைந்திருப்பதால் ஒப்பிட முடியாது என்று தெரிவித் திருக்கிறது.

SCROLL FOR NEXT