செய்தித்தாள், பத்திரிகைகள், பருவ இதழ்கள் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த துறை யில் 26 சதவீதமாக இருக்கும் அந்நிய நேரடி முதலீட்டு உச்ச வரம்பை 49 சதவீதமாக உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கத் திட்டமிட்டுள்ளது.
செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகளை அளிக்கும் செய்தித் தாள்கள், பருவ இதழ்கள் வெளியி டும் நிறுவனங்ளுக்கான அந்நிய நேரடி முதலீட்டு அனுமதி வரம்பு தற்போது 26 சதவீதமாக அரசு அனுமதித்துள்ளது. இந்த துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை அதிக ரிக்க வேண்டும் என பொருளாதார விவகாரங்களுக்கான துறை ஏற்கெ னவே பரிந்துரை செய்திருந்தது. இந்த முன்வரைவை கருத்தில் கொள்ள வேண்டுமென தொழில் துறை கொள்கை மற்றும் மேம் பாட்டு துறையிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
சமீபத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான உச்ச வரம்பை மத்திய அரசு தளர்த்தியது. விமான போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள், மருந்து தயாரிப்பு மற்றும் உணவு பதப்படுத்தும் துறை உள்ளிட்ட எட்டு துறைகளில் அந்நிய முதலீட்டு வரம்புக்கான அனுமதி தளர்த்தப்பட் டுள்ளது. இந்த அனுமதிகள் மூலம் அந்நிய நேரடி முதலீடு இந்தியாவுக்கு அதிக அளவில் வருவதற்கு வழி ஏற்படும் என்றும் அரசு நம்பிக்கை தெரிவித்தது.
2015-16 நிதியாண்டில் முதற்கட்ட மாக முதலீட்டு வரம்பில் தளர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அந்நிய நேரடி முதலீடு அளவு 29 சதவீதம் அதிகரித்து 40 பில்லியன் டாலர் களாக உயர்ந்தது. கடந்த நிதியாண்டில் 30.93 பில்லியன் டாலர்களாக இருந்தது குறிப்பிடத் தக்கது.