இந்தியாவில் முறைசார் துறையில் போதுமான வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா கூறினார்.
வேலை வாய்ப்பு குறித்த துல்லி யமான தகவலை திரட்டித் தரும் படி பிரதமர் நரேந்திர மோடி நிதி ஆயோக் அமைப்பைக் கடந்த மாதம் கேட்டுக் கொண்டார். இதற் காக பனகாரியா தலைமையில் ஒரு குழுவையும் அமைத்துள்ளார். இக்குழு அளிக்கும் துல்லியமான தகவல் அடிப்படையில் வேலை வாய்ப்பு உருவாக்கத்துக்கு உரிய கொள்கை முடிவுகளை அரசால் வகுக்க முடியும் என்று பிரதமர் அப்போது குறிப்பிட்டார்.
கடந்த 9-ம் தேதி இக்குழு அமைக்கப்பட்டது. ஜூன் 20-ம் தேதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அப்போது கூறப்பட்டது.
இக்குழு நேற்று முன்தினம் தங்களது அறிக்கையை பிரதமர் அலுவலகத்தில் அளித்தது. இந்த அறிக்கையில் வேலை வாய்ப்பு தகவல் குறித்த புள்ளி விவர சேகரிப்பில் முழுமையான மாற்றங்கள் செய்ய வேண்டும் என பரிந்துரைத்துள்ளதாக பனகாரியா கூறினார்.
அரசு போதிய வேலை வாய்ப்பு களை உருவாக்கியுள்ளதா என்பது தற்போது எடுக்கப்படும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் நிச்சயமாகக் கூற முடியாது. இத னால்தான் கணக்கெடுப்பில் மாற் றங்கள் செய்ய வேண்டும் என பரிந் துரைத்துள்ளதாக அவர் கூறினார்.
தற்போது தொழிலாளர் துறை 8 துறை வாரியாக வேலை வாய்ப்பு பட்டியலை வெளியிடு கிறது. 2014-ம் ஆண்டில் 4.21 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப் பட்டுள்ளதாகவும், 2015-ம் ஆண் டில் 1.35 லட்சமாகவும் 2016-ல் 2.5 லட்சம் வேலை வாய்ப்பு உரு வாக்கப்பட்டதாகவும் தெரிவிக் கிறது. அதேசமயம் இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) வெளியிட்டுள்ள புள்ளி விவர அறிக்கையில் ஆண்டுக்கு 37 லட்சம் வேலை வாய்ப்புகள் கடந்த 4 ஆண்டுகளில் உருவாக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள் ளது. இப்படி முரண்பட்ட புள்ளி விவரங்களால் உண்மை நில வரத்தை கணக்கிட முடியவில்லை.
இதனால் புள்ளி விவர தயாரிப்பு அறிக்கையை முறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு மற்றும் வேலை இல்லாதவர்கள் பட்டியலை தனித்தனியே தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை தயாரிக்கப்பட்ட புள்ளி விவரங்கள் அனைத்துமே மேலெழுந்த வாரியாக உள்ளது. எனவே இதை முழுமையான தகவலாகக் கருத முடியாது. அங்கொன்றும் இங்கொன்றுமாக மாதிரி ஆய்வு நடத்தி அதை மக்கள் தொகையுடன் ஒப்பிட்டு வேலை வாய்ப்பு விவரத்தை கணிப்பது சரியாக இருக்காது.
வேலை இல்லாதவர்கள் விகிதம் உயர்வு மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை இவற்றின் அடிப் படையில் வேலை வாய்ப்பு குறித்த தகவல் தயாரிக்கப்படுவது சரியான முறையாக இருக்காது. எனவே இதற்கு உரிய வழி முறையை வகுக்க வேண்டியது அவசிய மாகிறது.
வேலை வாய்ப்பு குறித்த புள்ளி விவரத்தை தயாரிக்க தலைமை புள்ளியியலாளர் டிசிஏ ஆனந்த், தொழிலாளர் துறைச் செயலர் மற்றும் சில நிபுணர்கள் மற்றும் பேராசிரியர் டி.என். னிவாசன் ஆகியோரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவினர் புள்ளி விவரத் தயாரிப்புக்கான பரிந்துரைகளை அளிப்பர். துல்லியமான புள்ளி விவரம் தயாராக ஓராண்டு ஆகும் என்று அவர் கூறினார்.
1970-களின் தொடக்கத்தில் தொடர்ச்சியாக புள்ளி விவரக் கணக்கு எடுக்கப்பட்டது. இப் போதைய கணக்கெடுப்புடன் ஒப் பிடுகையில் அது சிறந்ததாகவே இருந்தது. அப்போது வேலை யில்லாத் திண்டாட்டம் மிக அதிக அளவில் இருக்கவில்லை. அப் போது 2 சதவீதம் முதல் 3 சதவீத அளவுக்கே இருந்தது. கால மாற் றம், மக்கள் தொகை பெருக்கம் ஆகியவற்றோடு ஒப்பிட்டால் இப் போது வேலையில்லாத் திண்டாட் டம் 5 சதவீதம் முதல் 8 சதவீத அளவுக்கு இருக்கும் என்று கணிக்கலாம்.
முறைசார் துறையில் போதிய எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளை நாம் உருவாக்க வில்லை என்பதை ஒப்புக் கொண் டாக வேண்டும் என்றார்.
10,000 கோடி டாலர் வருமானம் ஈட்டும் ஐடி துறை இதுவரை 30 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது. ஆனால் மேலும் 10,000 கோடி வருவாய் ஈட்டினாலும் இத்துறையால் 12 லட்சம் வேலை வாய்ப்புகளைத்தான் உருவாக்க முடியும் என்றார் பனகாரியா.