பொதுத்துறையை சேர்ந்த ஆறு ஆலோசனை நிறுவனங்களை இன்ஜினீயர்ஸ் இந்தியா நிறுவனத் துடன் (இஐஎல்) இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச அளவில் பெரிய ஆலோசனை நிறுவனமாக உருவாக்க மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது. கல்வி, இபிசி என பல துறைகளை சேர்ந்த ஆலோசனை நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறு வனங்களை இணைத்து சர்வதேச அளவில் பெரிய நிறுவனமாக உருவாக்க வேண்டும் என அரசு மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொதுத்துறை நிறுவனங்களை இணைப்பது குறித்து கடந்த பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருந்தார். ஆலோசனை பிரிவில் அதற்கான சாத்தியம் இருப்பதாக மூத்த அதிகாரி தெரிவித்தார்.
இன்ஜினீயரிங் புராஜக்ட்ஸ் (இந்தியா) நிறுவனம் கட்டுமானம் மற்றும் இபிசி துறைகளில் ஆலோசனை வழங்கி வருகிறது. குறிப்பாக எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இன்ஜினீயர்ஸ் இந்தியா பெரும்பான்மையான பங்குகளை வைத்துள்ளது.
தவிர கட்டுமானத்துறையில் தொழில்நுட்ப ஆலோசனைகளை மிகான் நிறுவனம் வழங்கி வருகிறது. டெலிகாம் பிரிவில் டெலிகம்யூனிகேஷன்ஸ் கன்சல்டன்ஸ் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இதுபோன்ற ஆலோசனை நிறுவனங்களை இன்ஜினீயர்ஸ் இந்தியாவுடன் இணைத்து மிகப் பெரிய நிறுவனமாக உருவாக்கப் படும். இந்த இணைப்புக்கு பிறகு புதிய நிறுவனம் அனைத்து துறைகளின் திட்டங்களையும் எடுக்க முடியும். இந்தியாவில் எல் அண்ட் டி போலவும், அமெரிக்கா நிறுவனமான பெக்டெல் போலவும் புதிய நிறுவனம் இருக்கும்.
பொதுத்துறை நிறுவனங் களை இணைக்கும் பட்சத்தில், புதிய நிறுவனம் பலமடையும், வாய்ப்புகள் அதிகரிக்கும், இதன் மூலம் புதிய நிறுவனம் புதிய வாய்ப்புகளை தேடிக் கண்டுபிடிக்க முடியும் என பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருந்தார்.
நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் இந்த பங்கு 5.53 சதவீதம் உயர்ந்து 158.45 ரூபாயில் முடிவடைந்தது.