ஏறக்குறைய 8 லட்சம் முதல் 9 லட்சம் வரையிலான நிறுவனங்கள் ஆண்டுதோறும் தாக்கல் செய்யவேண்டிய வருமான வரி விவரத்தை தாக்கல் செய்யவில்லை என்று மத்திய வருவாய்த்துறைச் செயலர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்துள்ளார்.
நிறுவன விவகார அமைச்சகத்தி டமிருந்து (எம்சிஏ) கிடைக்கப்பெற்ற அதிகாரபூர்வ தகவலின் அடிப் படையில் `அமலாக்க தின’ நிகழ்ச்சியில் பேசுகையில் அவர் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
இத்தகைய வரி ரிட்டர்ன் தாக் கல் செய்யாத நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கு மாறு பிரதமர் அலுவலகம் ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இக்குழு 15 தினங்களுக்கு ஒரு முறை இந்நிறுவனங்களை ஆய்வு செய்யும் என தெரிகிறது.
9 லட்சம் நிறுவனங்கள்
மத்திய அமைச்சகத்திடம் மொத்தம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 15 லட்சமாகும். இவற்றில் ஏறக்குறைய 9 லட்சம் வரையிலான நிறுவனங்கள் ஆண்டு வரி விவரத்தைத் தாக்கல் செய்யவில்லை. இவை அனைத்தும் நிறுவன விவகார அமைச்சகத்திடம் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். இவ்விதம் செய்யாததால் அவை அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த நிறுவனங்களில் சிலவற் றுக்கு வரி விவர அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறிய ஆதியா, இந்நிறுவனங்களைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக நிறுவன விவகாரத்துறை அமைச்சகத்தின் செயலர் உள்ளார். அவர் தலைமை யிலான குழு இந்நிறுவனங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றார்.
அந்நிய செலாவணி மோசடி
சமீபகாலமாக தொழில் ரீதியான அந்நியச் செலாவணி மோசடிகள்தான் பெருகியுள்ளன என்று குறிப்பிட்ட அவர், பாங்க் ஆப் பரோடாவில் ரூ. 6 ஆயிரம் கோடி பரிவர்த்தனை நிகழ்ந்த சம்பவத்தைச் சுட்டிக் காட்டினார்.
கடந்த பிப்ரவரி மாதம் உள்நாட்டில் மோசடியில் ஈடுபட்ட பல போலி நிறுவனங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இந்நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு இவற் றின் வங்கிக் கணக்குகள் முடக்கப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.