வணிகம்

ஏர் இந்தியா பங்குகளை வாங்க இண்டிகோ விருப்பம்

செய்திப்பிரிவு

ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்கு களை வாங்க இண்டிகோ நிறு வனம் விருப்பம் தெரிவித்திருப்ப தாக விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார். ஏர் இந்தியாவின் பங்குகளை விலக்கிக்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய அடுத்த நாளே அமைச்சர் இந்த தகவலை தெரிவித்திருக்கிறார்.

இதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டிருக்கின்றன. இந்த விவாதம் மிகவும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.

தவிர மேலும் சில நிறுவனங் களும் ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்ததாக கூறிய அவர் எந்தெந்த நிறுவனங் கள் என்பதை அறிவிக்க மறுத்து விட்டார். அதேபோல இண்டிகோ நிறுவனமும் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. இண் டிகோ நிறுவனம் கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

ஊடகங்களில் இந்த வெளி யானதை தொடர்ந்து இண்டிகோ நிறுவனத்தின் பங்குகள் 2.2 சதவீதம் வரை சரிந்தது. இண்டிகோ நிறுவனம் உள்நாட்டில் 40 சதவீத சந்தையை வைத்திருக்கிறது. ஏர் இந்தியா 13 சதவீத சந்தையை வைத்திருக்கிறது.

பணியாளர்களுக்கு எச்சரிக்கை

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிட்ட முன்னாள் பணியாளர் களுக்கு ஏர் இந்தியா எச்சரிக்கை விடுத்திருக்கிறது. கடந்த ஜூன் 21-ம் தேதி ஓய்வுகால சலுகைகளை ஏர் இந்தியா விலக்கிகொண்டது. இது குறித்து பல முன்னாள் பணி யளர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்திருந் தனர்.

நிறுவனத்துக்கு எதிராக முன் னாள் பணியாளர்கள் பொது வெளியில் கருத்து தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஏர் இந்தியா எச்சரித்துள்ளது.

முன்னாள் பணியாளர்களுக்கு விமான பயணச்சலுகை மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளன. 30 ஆண்டுகள் பணியாற்றியவர் களுக்கு 24 இலவச டிக்கெட்கள் வழங்கப்படும். இதில் 25 சதவீதம் வெளிநாடுகளுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.

SCROLL FOR NEXT